கணினி அலகு - பிட் - பைட் - மெகா பைட் - கிகாபைட் . . .கணினி ஒரு இயத்திரனியல் சாதனம் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஒரு மின் விளக்குப் போல் கணினியிலுள்ள மின் சுற்றுக்களும் On அல்லது off எனும் இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளன. On ஆக இருக்கும் நிலையை 1 (ஒன்று) எனும் இலக்கத்தாலும் off நிலையை 0 (பூச்சியம்) எனும் இலக்கத்தாலும் குறிக்கப்படுகின்றன. தகவல்களைக் கணினி நினைவகத்திலும், டிஸ்க் ட்ரைவ்லிலும் சேமிக்கும் போது ஒன்றுகளாலும் பூச்சியத்தாலும் மட்டுமே பதிவு செய்கின்றன. இங்கு ஒன்று அல்லது பூச்சியத்தை ஒரு பிட் என அழைக்கப்படும். பைனரி டிஜிட் (binary digit) எனும் வார்த்தைகளிலிருந்ததே பிட் (bit) எனும் வார்த்தை உருவானது. பிட் என்பது ஒரு தகவலின் மிகச் சிறிய அலகாகும்.


ஒரு பிட்டை மாத்திரம் கொண்டு ஒரு எழுத்தையோ அல்லது குறியீட்டையோ உருவாக்கி விட முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பிட்டுகளை ஒரு அணியாக ஒன்று சேர்க்கும்போதே எதனையும் (ஒரு தகவலை) அர்த்தமுள்ளதாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு 8 பிட்டுகள் சேர்ந்ததை ஒரு பைட் (byte) எனப்படும். ஒரு பைட் மூலம் 256 வெவ்வேறான எழுத்துக்களையோ அல்லது குறியீடுகளையோ வெளிப்படுத்தலாம். அதாவது எட்டு பிட்டுகளை மூலம் 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். இதன் மூலம் கீபோர்டிலுள்ள ஆங்கில பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளையும் உருவாக்க முடிகிறது.

உதாரணமாக் "A" எனும் எழுத்தானது கணினியில் 01000001 என பதியப்படுகிற்து. (அதாவது கணினி மின் சுற்றில் 8 Switches / ஆளிகள் இயங்குகின்றன) அதேபோல் " * " எனும் குறியீடு 00101010 என பதியப்படுகிறது. Cat எனும் பெயரை பதிய 010000110110000101110100 பிட்டுகள் இவ்வாறு அணி சேர்கின்றன. இவை மூன்று எழுத்துக்களைக் குறிக்கின்றன. எனவே இது மூன்று பைட்டுகளைக் கொண்டிருக்கும்.
பைட் கொண்டு ஒரு சிறு அளவிலான தகவலையே சேமிக்க முடியும் தகவலின் அளவு கிலோ பைட், மெகாபைட், கிகா பைட் போன்றவற்றிலேயே குறிப்பிடப்படுகின்றன.

ஒரு Kilobyte (KB) கிலோ பைட் என்பது 1024 பைட்டுகளுக்குச் சமனானது. ஒரு சராசரி எம்.எஸ். வர்ட் ஆவணம் 100 பைட்டுகளைக் கொண்டிருக்கும்.

ஒரு மெகா பைட் Megabyte (MB) என்பது 1024 கிலோ பைட்டுகள் கொண்டது. 1024 மெகா பைட்டுகளை ஒரு கிகாபைட் (Gigabyte) கொண்டிருக்கும்.

பைல்களின் அளவு பைட்டிலும் கிலோ பைட்டிலும் அளவிடப்படுகின்றன. ஒரு தசாப்தத்துக்கு முன்பு வரை அனேகமன மென்பொருள்கள் 1.44 மெகா பைட் அளவு கொண்ட ப்லொப்பி டிஸ்கிலேயே கிடைக்க்கப்பெற்றன. அப்போது வெளிவந்த மென்பொருள்க்ளின் அளவு மிகவும் சிறியதாயிருந்தன. அதனால் ஒரு மென்பொருளை ஓரிரு ப்லொப்பி டிஸ்கில் அடக்கக் கூடியதாயிருந்தது. எனினும் தற்காலத்தில் வெளி வரும் மென்பொருள்களின் அளவு முன்னரை விடப் பல மடங்கு பெரிதாகவுள்ளன. உதராணமாக் எம்.எஸ்.ஒபிஸ் மென்பொருள் தொகுப்பின் அண்மைய பதிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கொள்ளளவு சுமார் 700 மெகா பைட்டுகளாகவுள்ளது. அதாவது ஒரு சீடியின் அளவுக்குச் சமமானது.

மென்பொருள்களைப் போன்றே ஹாட் டிஸ்கின் கொள்ளளவுகளும் தற்போது நினைத்தும் பார்க்க முடியாத அளவுகளில் கிடைக்கின்றன. பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு ஹாட் டிஸ்கின் உச்ச கொள்ளளவு 1 கிகாபைட்டிலும் குறைவாகவேயிருந்தன. பின்னர் அதன் கொள்ளளவு 10, 20, 40, 60, 80, 120, 160, 300 500 கிகாபைட் என படிப்படியாக மிக வேகமாக அதிகரித்து தற்போது ஒரு டெராபைட் அளவிலும் கூட ஹாட் டிஸ்க்குகள் கிடைக்கப் பெறுகின்றன. ஒரு டெரா பைட் என்பது 1024 கிகா பைட்டுகளுக்க்ச் சமனானது.

டேட்டாவை சேமிக்கும் ப்ளொப்பி, சிடி, டிவிடி, ஹார்ட் டிஸ்க், பென் ட்ரைவ் போன்றவற்றில் அதிக அளவில் டேட்டா சேமிக்கப் படுகையில் அவற்றின் அளவைக் குறிக்க கிலோபைட், மெகாபைட், கிகாபைட் போன்ற அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.


பிட் (Bit) 0 அல்லது 1 ஐக் குறிக்கும்

4 பிட்டுகளின் சேர்க்கையை நிப்பல் (Nibble) என்ப்படும்.

8 பிட்டுகளின் சேர்க்கையை ஒரு பைட் (Byte) எனப்படும்.

16 பிட்டுகளின் சேர்க்கையை ஒரு வர்ட் (Word) எனப்படும்.

1024 பைட்டுகள்(Byte) சேர்ந்தவை ஒரு கிலோபைட் Kilobyte (KB) எனப்படும்.

1024 கிலோ பைட்டுகள் சேர்ந்தவை ஒரு Megabyte (MB) எனப்படும். ஒரு மெகாபைட் 1200 எழுத்துக்களாலான 873 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்திற்குச் சமமானது.

1024 மெகா பைட்டுகள் சேர்ந்தவை ஒரு கிகா பைட் Gigabyte (GB)எனப்படும். இதனுள் 200 பக்கங்கள் கொண்ட 4473 புத்தகங்களை அல்லது 3 MB அளவு கொண்ட 341 படங்களை அல்லது 4 MB அளவு கொண்ட 256 பாடல்களைச் அடக்கிவிட்லாம்.

1024 கிகா பைட்டுகள் சேர்ந்தவை ஒரு Terabyte (TB) எனப்படும். ஒரு டெராபைட்டில் 200 பக்கங்கள் கொண்ட 4,581,298 புத்தகங்களை அல்லது 3 MB அளவு கொண்ட 349,525 படங்களை அல்லது 4 MB அளவு கொண்ட 262,144 MP3 பாடல்களைச் சேமிக்கலாம். மேலும் இது 650 MB அளவு கொண்ட 1,613 சீடிக்களுக்கு அல்லது 4.38 GB அளவு கொண்ட 233 டிவிடிக்களுக்கு அல்லது 25GB அளவு கொண்ட 40 ப்ளூரே டிஸ்க்குகளுக்குச் சமமானது.

டெரா பைட்டுடன் நின்று விடவில்லை. Petabyte (PB), Exabyte (EB), Zettabyte (ZB), Yottabyte (YB) என எதிர் காலத்தில் தொடர இருக்கிறது.

No comments:

Post a Comment