பாதுகாப்பான Password உருவாக்கலாம்



இன்று இணையத்தை உபயோபடுத்ததவர்கள் யாரும் இல்லை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இன்று E-Mail , Social Net Work, Net Banking, Chatting, என பற்பல ID -கள் பயன்படுத்துகிறோம் இதற்க்குரிய Password கொடுப்பது நமது கையில் உள்ளது. எளிதானது, பாதுகாப்பான Password இது என்று நமக்கு அறிவுறுத்த இந்த Web Site உதவுகிறது. நமக்கு தேவையான வடிவத்தில் எழுத்துகள், எண்கள், குறியீட்டு எழுத்துகள், என Password-டில் உபயோகிக்க எளிதாக பயன்படுத்த நாம் Password உருவாக்கலாம்.    

     






கணினியின் - Ram cleaner



Ram cleaner கணினியில் உள்ள வன்பொருள்களில் Ram மிகவும் முக்கியமானது நமது கணினியின் வேகத்தையும் சிராக பயன்படுத்த மிக துணைபுரிகிறது அத்துடன் கணினியில் Game விளையாட இதன் பங்கு மிக மிக அவசியம் அப்படிப்பட்ட Ram-மை Clean செய்ய மற்றும் வேகத்தை அதிகப்படுத்த Ram செயல்பாட்டை மாற்றி அமைக்க இந்த Memory Improve Master மென்பொருள் உதவி செய்கிறது அத்துடன் நமது கணினியின் அமைப்புக்கு ஏற்ற மாதிரி Ram-மின் செயல்பாட்டை மாற்ற Auto - Recommend செய்கிறது இது முற்றிலும் இலவசம்.




த‌மிழ் மொழி இல‌க்க‌ண‌ம் & பாட‌ங்க‌ள்



த‌மிழ் மொழி கத்துக்கொள்ள ஆசைபடும், வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாட்டில் இருந்து ந‌ம் நாட்டில் தொழில் செய்பவர்கள், வெளிநாட்டில் வாழும் த‌மிழ் மக்கள் அவ‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ளுக்கு த‌மிழ் இல‌க்க‌ண‌த்துட‌ன், பாட‌ங்க‌ளுட‌ன், தெளிவான‌ முறையில் இந்த தளம் ஒலி,ஒளி வ‌டிவ‌த்தில் கற்றுக்கொடுக்கிறது. த‌மிழ் படிப்பவர்களுக்கு இது உதவிடும்.




 

Tamil Dictionary Online - தமிழ் அகராதி



தமிழில் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தேட அகராதி வேண்டும், தமிழில் சில மென்பொருட்கள் உள்ளது . நாம் பயன்படுத்தும் கணினியில் தமிழ் அகராதி மென்பொருள் இருப்பதில்லை இணைய இணைப்பு இருந்தால் கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று நமக்கு வேண்டிய வார்த்தைக்கு பொருள் அதிவேக ஆன்லைன் தமிழ் அகராதி உடன் கிடைக்கும்

Window's - சென்னை-தமிழில்




Save = வெச்சிக்கோ


Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ

Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ

Help = ஒதவு

Find = பாரு

Find Again = இன்னொரு தபா பாரு

Move = அப்பால போ

Mail = போஸ்ட்டு

Mailer = போஸ்ட்டு மேன்

Zoom = பெருசா காட்டு

Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு

Open = தெற நயினா

Close = பொத்திக்கோ

New = புச்சு

Old = பழசு

Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு

Run = ஓடு நய்னா

Execute = கொல்லு

Print = போஸ்டர் போடு

Print Preview = பாத்து போஸ்டர் போடு

Cut = வெட்டு - குத்து

Copy = ஈயடிச்சான் காப்பி

Paste = ஒட்டு

Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு

Delete = கீச்சிடு

anti virus = மாமியா கொடுமை

View = லுக்கு உடு

Tools = ஸ்பானரு

Toolbar = ஸ்பானரு செட்டு

Spreadsheet = பெரிசிட்டு

Database = டப்பா

Exit = ஓடுறா டேய்

Compress = அமுக்கி போடு

Mouse = எலி

Click = போட்டு சாத்து

Double click = ரெண்டு தபா போட்டு சாத்து

Scrollbar = இங்க அங்க அலத்தடி

Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு

Next = அப்பால

Previous = முன்னாங்கட்டி

Trash bin = கூவம் ஆறு

Solitaire = மங்காத்தா

Drag & hold = நல்லா இஸ்து புடி

Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?

Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?

Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?

Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு

Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?

General protection fault = காலி

Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!

Unrecoverable error = படா பேஜார்பா

Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்

Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

MOBILE தொலைந்தால்

MOBILE PHONE தொலைந்து விட்டதா கவலை பட வேண்டாம். உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக. உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அனைத்து வகையான MOBIL PHONEகும் பொருந்தும்



மென்பொருள்




SOFTWARE மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் SOFTWARE ஐ UNINSTALL செய்ய PASSWORD பயன்படுத்தப்படுகிறது அதனால் மேலும் பாதுகாப்பு அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE MOBIL NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF / ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள்.


தரவிறக்கம்


புகார் To  E-Mail


send an e-mail to cop@vsnl.net with the following info.

Your name:

Address:

Phone model:

Make:

Last used No.:

E-mail for communication:

Missed date:

IMEI No:



இணையத்தில் பணம்




வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு. அதிலும் இணையத்தின் மூலம் சம்பாதிக்க முடியுமா என்று தேடினால், பணம் கட்டுங்கள் வேலை தருகிறோம் என்று நிறைய விளம்பரங்கள் பார்க்கலாம். அதை நம்பி பணம் கட்ட பயமாக இருக்கும். அதை விட்டால், நமக்கு பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த ஒன்று கூகுள் ஆட்சென்ஸ் மட்டுமே. ஆனால், அதில் சாமானியர்கள் பெரிய வருமானமெல்லாம் ஈட்ட முடியாது.


உங்களுக்கு ஆங்கில அறிவு இருந்தால்...அதாவது பிழையில்லாமல் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தால், அதோடு, சற்று வேகமாக டைப் செய்ய முடியும் என்றால், தாராளமாக நமக்கான பாக்கெட் மணியை எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க முடியும். தேவை கொஞ்சம் கற்பனைத் திறனும் பொறுமையும் விடாமுயற்சியுமே!

இந்த கட்டுரை அமேசான் டாட் காமின் எம்டர்க் பற்றியது. இது என்ன மாதிரியான ஒர்க் என்று தெரிந்து கொள்ள ஒரு சிறு உதாரணம் தருகிறேன். உங்க மகன் பள்ளியில் கட்டுரைப் போட்டிக்காக ஒரு சிறு கட்டுரை எழுதித் தரச் சொல்லுகிறான். ‘தொலைக்காட்சியின் பயன்கள்’ என்ற தலைப்பு என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தெரிந்தால் எழுதித் தருவீர்கள், அல்லது தெரிந்தவர்களிடம் எழுதி வாங்குவீர்கள். அப்படி யாருக்குமே தெரியாவிட்டால் என்ன செய்வீர்கள்???

ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, எம்டர்க் டாட் காம் சென்று கட்டுரையின் தலைப்பு, தேவைப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை அதற்கு நீங்கள் தர சம்மதிக்கும் தொகை சுமாராக ஒரு நூறு ருபாய்கள் என்று கொடுத்து, க்ரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி விட்டால் போதும், உலகின் எந்த மூலையில் இருந்தாவது யாராவது ஒருவர் அதை உங்களுக்காக எழுதித் தந்து விடுவார்கள். பணம் அவருடைய் கணக்கில் சேர்ந்து விடும். இதற்கு ஒரு சிறு தொகையை நீங்கள் அத்தளத்துக்கு கமிஷனாக செலுத்தினால் போதும்.

இப்பொழுது உங்களுக்கு ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கட்டுரை எழுதுவது மட்டுமல்லாமல், ப்ராடக்ட் ரிவ்யூ, ஆடியோ ட்ரான்ஸ்க்ரிப்ஷன், இமேஜில் குறைகள் கண்டுபிடிப்பது, வெப்சைட் பற்றி கமெண்ட் எழுதுவது என்று பல விதமான ஒர்க் வரும். ஒவ்வொரு நாளும் புதுவிதமன ஒர்க்களைப் பார்க்கலாம். சும்மா க்ளிக் செய்வதற்குக் கூட சிலர் பணம் கொடுக்கிறார்கள். காரணம், கூகுள் சர்ச் இன்ஞின் போய் அவர்களுடைய தளத்தைக் க்ளிக் செய்தால், அவர்களுடைய ரேங்க் ஏறும். இதற்கு நமக்கு பணம் தருகிறார்கள்.

சரி இப்போது கணக்கு துவங்குவது எப்படி என்று பார்ப்போம். www.mturk.com போய் worker என்ற லின்க்கில் நம் விவரங்களைக் கொடுத்து கணக்குத் துவங்கிக் கொள்ள வேண்டியது தான். துவங்கிய உடனே hits என்ற லிங்க்கை அழுத்தி எந்த விதமான வேலைகள் இருக்கின்றன என்று பார்த்து நமக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து செய்ய ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு ஒர்க்குக்கும் ஒவ்வொரு விதமான தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதோடு, எவ்வளவு மணி நேரத்துக்குள் அதை முடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருப்பார்கள்.

நாம் ACCEPT என்று இருப்பதைக் க்ளிக் செய்து ஒர்க் முடித்தவுடன் SUBMIT கொடுக்க வேண்டும். நாம் செய்து முடித்த வேலையை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து ஓக்கே கொடுத்தால் மட்டுமே நம் கணக்கில் பணம் சேரும். REJECT செய்து விட்டால் பணம் கிடைக்காது. அவர்கள் எதிர்பார்த்தது இல்லாவிட்டாலோ, ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணப்பிழை இருந்தாலோ மட்டுமே REJECT செய்வார்கள்.

நாம் செய்து முடித்த ஒர்க்களை HIT என்று சொல்கிறோம். HIT APPROVAL RATE என்பது, நூற்றுக்கு எத்துணை ஒர்க்கள் நாம் சக்ஸஸ்ஃபுல்லாக முடித்திருக்கிறோம் என்று காட்டும். அதை 95 சதவீதத்துக்கும் மேல் இருக்கும்படி வைத்துக் கொண்டால், நல்ல ஒர்க்கள் நிறைய வரும். நாம் எடுத்த ஒர்க்கை நம்மால் செய்ய முடியாமல் போனால், அதை ரிடர்ன் செய்து விடலாம். அப்படி ரிடர்ன் செய்யாமல், அதை அப்படியே விட்டு விட்டால், அது ABANDONED என்று காட்டும்.

சரி, ஒர்க் எல்லாம் நல்லபடியாக நிறைவு செய்து ஓரளவுக்கு கணக்கில் பணம் சேர்ந்து விட்டது. அந்தப் பணத்தை எப்படி எடுப்பது? எப்போது வேண்டுமானாலும் நாம் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்திய ருபாயிலேயே செக் வந்து விடும். ஒவ்வொரு முறை எடுக்கும் போதும் ப்ராஸசிங் கட்டணமாக 4 டாலர் பிடித்துக் கொள்வார்கள். ஆனால், பணத்தை முதல்முறை எடுக்கும் முன்பாக, நாம் பாஸ்போர்ட், வோட்டர்ஸ் ஐடி, பேன் கார்டு இம்மூன்றில் ஏதாவது ஒன்றை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். அந்த நபர் நாம் தான் என்பதற்கு நாம் தரும் அத்தாட்சி இது. அதோடு, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பதைத் தடை செய்ய இந்த வழியைப் பின்பற்றுகிறார்கள்.

இப்ப எங்களுக்கு புரிந்தது...ஆனால், நீ இதுவரை எவ்வளவு சம்பாதித்து இருக்கிறாய் என்று கேட்கிறீர்களா??? எனக்கு இது பற்றி முன்பே தெரியும் என்றாலும், நேரமின்மையால் இதில் இறங்கவில்லை. தற்போது ஒரு பதினைந்து நாட்களாகத்தான் கணக்குத் துவங்கி செய்து வருகிறேன். என் பெயரில் ஒன்றும் என்னவர் பெயரில் ஒன்றுமாக இரண்டு கணக்குகளில் ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறேன். தினமும் ஓரிரு மணி நேரம் மட்டுமே செய்வதால், மொத்தமாக 80 டாலர்கள் சேர்ந்துள்ளன. கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்...






இதில், Total Earning, Your Hit Status, Hits Total, Hits Available to You ஆகியவற்றைப் பார்த்தால், நான் சொன்ன கான்செப்ட் சுலபமாகப் புரியும். இதில் affiliation எல்லாம் கிடையாது. நேரடியாக அத்தளத்துக்கு சென்று கணக்குத் துவங்கிக் கொள்ள வேண்டியது தான். எங்கள் ஊரில் ருபாய் 3000 பெற்றுக் கொண்டு இதில் கணக்குத் துவங்கித் தருகிறார்கள். அது போன்ற ஆட்களை நம்பி யாரும் ஏமாந்து விடக் கூடாது. எம்டர்க்கில் நீங்களும் பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள்!



நன்றி - சுமஜ்லா.




BIOS - பயோஸ்





கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System என்பதாகும். அதன் மூலம். நினைவகம், ஹாட் டிஸ்க், மற்றும் துணைச் சாதனங்கள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என்பதைச் சரி பார்த்து உறுதி செய்து கொள்ளும். பயோஸ் ஆனது கணினியிலுள்ள இயங்கு தளத்திலிருந்து வேறுபட்டது. ஹாட் டிஸ்கில், சேமிக்கப்பட்டிருக்கும். இயங்குதளம் கணினிக்கும் அதனைப் பயன் படுத்துபவர்களுக்குமான ஒரு இடை முகப்பை வழங்கிறது. எனினும் பயோஸ் புரோக்ரமானது கணினி மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் ராம் (Read Only Memory) எனும் நினைவக (Chip) சிப்பில் சேமிக்கப்பட்டிருக்கும். கணினியை On செய்ததும் கணினியைக் கட்டுப்படுத்தி பின்னர் ஹாட் டிஸ்கிலுள்ள இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்றி கணினியை ஆரம்பித்து வைக்கிறது பயோஸ். இதனை Firmware எனவும் அழைப்பதுண்டு. ஏனெனில் இதில் நாம் மாற்றங்கள் செய்ய முடியாது.


கணினியில் பயோஸிற்கு பல பணிகள் வழங்கப் பட்டிருந்தாலும் இயங்கு தளத்தை ஆரம்பித்து வைப்பதே அதன் முக்கிய பணியாகும். கணினியை இயக்கியதும் பயோஸ் மைக்ரோ ப்ரொசஸருக்கு அதன் முதல் அறிவுறுத்தலை வழங்குகிறது. அனைத்து வன்பொருள்களும் முறையாக இயங்குகிறதா என்பதை சுய பரிசோதானை செய்து கொள்ளும். இதனை Power On Self Test (POST) எனப்படுகிறது ஹாட் டிஸ்க், சீடி ராம் போன்றவற்றை இனம் காணுதல், நினைவகத்தின் அளவை சோதித்தல், ப்ரோசெஸ்ஸரின் வேகத்தை அளவிடல் கடிகாரம் மற்றும் முக்கிய செட்டிங்க்ஸ் என்பவற்றை நிர்வகித்தல். கிரபிக்ஸ் காட் (Graphics Card) , சவுண்ட் காட் (Sound Card) போன்ற எனைய சாதனங்களில் பொருத்தப் பட்டிருக்கும் இது போனற வேறு பயோஸ் சிப்புகளை ஆரம்பித்து வைத்தல் அவற்றின் ஏனைய பணிகளில் அடங்குகின்றன..

bios கணினியை இயக்கியதும் ஆரம்பிக்கும் பயோஸ் ப்ரோக்ரமுடைய வழமையான பணி ஒழுங்கில் CMOS ஐ பரிசோத்திப்பதன் மூலம் பயனர் தெரிவுகளில் ஏதாவது மாற்றங்கள் உள்ளதா என்பதைப் பரிசோதித்தல் மின் வழங்கியை நிர்வகித்தல் (Power Management), மற்றும் எந்த ட்ரைவிலிரிருந்து இயங்கு தளத்தை ஆரம்பிப்பது (Boot Sequence) என்பதைத் தீர்மானித்தல் போன்ற பல பணிகள் அடங்குகின்றன.

தேதி, நேரம் மற்றும் ஏனைய கணினியின் செட்டிங்ஸ் விவரங்களை பேட்டரி மின்சக்கதியில் இயங்கும் ஒரு நினைவக சிப்பில் சேமிக்கிறது. இதனை (CMOS) சிமோஸ்எனப்படுகிறது.

BIOS (Basic Input/Output System) என்பதும் CMOS (Complementary Metal Oxide Semiconductor) என்பதும் ஒன்றையே குறிப்பதாகப் பலரும் தவறாகக் எண்ணுகின்றனர். இவற்றிற்கிடையே தொடர்புகளிருந்தாலும் இரண்டும் வேறு பட்டவை என்பதைநினைவில்கொள்ளுங்கள்.. .

பயோஸ் என்பது கணினியை இயக்கும் அதேவேளை தேதி, நேரம் மற்றும் செட்டிங்ஸ் விவரங்களை பயோஸ் சேமித்து வைக்குமிடமே சிமோஸ் எனும் சிப்பாகும். சீமோஸ் என்பதுஒருவகைநினைவகம்,.

சீமோஸில் மாற்றங்கள் செய்ய கணினியை On செய்தவுடனேயே கீபோர்ர்டில் குறித்தத ஒரு விசையை அழுத்த வேண்டும். இதற்கான அறிவுறுத்தல் கணினியை ஆரம்பித்த்துமே திரையின் கீழ் எந்த விசையை அழுத்த வேண்டும் என்பதைக் காண்பிக்கும். சீமோஸ் செட்டபில் நுழைந்ததுமே CMOS கணினிப் பயனருக்குப் பல தெரிவுகளைச் செய்ய அனுமதிக்கிறது. தேதி மற்றும் நேரத்தை மாற்றியமைப்பது, கணினியை எந்த ட்ரைவிலிருந்து இயக்கி இயங்கு தளத்தை ஆரம்பிப்பது பூட் செய்யப்படும் ஒழுங்கு (Boot Sequence) , பாஸ்வர்ட் செட்டிங், நினைவக செட்டிங். மின் வழங்கியை நிர்வகித்தல் போன்ற பல செட்டிங்ஸை மாற்றியமைக்கக் கூடிய வசதியைத்தருகிறது.


பயோஸ் ப்ரோக்ரமை காலத்துக்குக் காலம் புதுப்பிக்கவும் (update) முடியும். புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஏதாவது வன்பொருள் சாதனங்களைக் கணினி இனம் காண வேண்டுமானால் அந்த பயோஸை வடிவமைத்த நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அதன் புதிய பதிப்பை டவுன் லோட் செய்து கொள்ள வேண்டும். பயோஸை அப்டேட் செய்வதற்குரிய யூட்டிலிட்டியும் அதனுடன் இணைந்து வரும். யூட்டிலிட்டி ப்ரோக்ரமையும் அப்டேட் பைல்களையும் ஒரு பிளாப்பி டிஸ்கில் பிரதி செய்து பிளாப்பியை கணினியில் நுளைத்து இயக்க பழைய பயோஸ் பைல்களை அழித்து புதிதாக நிறுவிக் கொள்ளலாம். . எனினும் பயோஸ் அப்டேட் செய்வதில் கூடிய கவனம்தேவை.

தற்போது கணினிகளில் பயோஸை அப்டேட் செய்ய வேண்டிய தேவை அரிதாகவே ஏற்படுகிறது. எனினும் பழைய கணினிகளிலுள்ள பயோஸ் சிப் தற்போது பாவனையிளுள்ள வன்பொருள் சாதனங்களை ஆதரிக்காது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வந்த கணினிகளில் பயோஸ் ஆனது அதன் ரொம் சிப்பை மாற்றுவதன் முலமே அப்டேட் செய்யப்பட்டது. எனினும் தற்போது EEPROM (Electrically Erasable Programmable Read-Only Memory எனும் நினைவக சிப்பிலேயே சேமிக்க்கப்படுவதால ராம் சிபை மாற்றாமலேயே தேவையேற்படின் பயோசை அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஹாட் டிஸ்க் - Cleaner & Defragmenter



ந‌ம‌து க‌ணினியில் உள்ள‌ ஹாட் டிஸ்க்கை பார‌மரிக்க‌ மிகா குறைந்த‌ 1.14 எம்.பி அள‌வில் உள்ள‌ மென்பொருள் இத‌ன் மூல‌ம் Duplicate Cleaner, Junk Cleaner, DLL Cleaner, தேவைய‌ற்ற‌ .err, .xlk, .fnd, .mch, .dmp, அனைத்தையும் Delete செய்து க‌ணினியின் வேக‌த்தையும், அத‌ன் கொள்திற‌னையும் அதிக‌ப்ப‌டுத்தி சிற‌ப்பாக‌ இய‌க்க‌ உதவி செய்கிற‌து



தரவிறக்கம்



ஹாட் டிஸ்க்-Defragmenter



நமது கணினியில் உள்ள ஹாட்டிஸ்க்கில் XP Program File-கள் மற்றும் நமது Word, Software, Video & Mp3 File போன்ற பல File-கள் ஹாட்டிஸ்க்கில் அங்ககே பரவலாக நிரம்பி இருக்கும் அந்த சமயங்களில் நாம் ஒரு மிகப் பெரிய File சேமிக்க நினைக்கையில் ஹாட்டிஸ்க்கில் இடம் இல்லை என்ற பெட்டி செய்தி திரையில் தோன்றும் அப்போது ஹாட்டிஸ்கை Defragmenter செய்வது அவசியம் அதற்கான மென்பொருள் இந்த Auslogics Disk Defrag இது கொள்திறனையும் மற்றும் வேகத்தை அதிகப்படுத்தி சிறப்பாக இயக்க உதவி செய்கிறது மற்றும் நமது எல்லா File-கள் அனைத்தையும் ஒரு சேர சீராக சேர்த்து வைக்கிறது அத்துடன் நமது ஹாட்டிஸ்க்கை தானியங்கி முறையில் 1வாரம் அல்லது 1மாதம் என்ற அடிப்படையில் தானாக இயங்கி பராமரிக்கிறது.






கணினி அலகு - பிட் - பைட் - மெகா பைட் - கிகாபைட் . . .



கணினி ஒரு இயத்திரனியல் சாதனம் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஒரு மின் விளக்குப் போல் கணினியிலுள்ள மின் சுற்றுக்களும் On அல்லது off எனும் இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளன. On ஆக இருக்கும் நிலையை 1 (ஒன்று) எனும் இலக்கத்தாலும் off நிலையை 0 (பூச்சியம்) எனும் இலக்கத்தாலும் குறிக்கப்படுகின்றன. தகவல்களைக் கணினி நினைவகத்திலும், டிஸ்க் ட்ரைவ்லிலும் சேமிக்கும் போது ஒன்றுகளாலும் பூச்சியத்தாலும் மட்டுமே பதிவு செய்கின்றன. இங்கு ஒன்று அல்லது பூச்சியத்தை ஒரு பிட் என அழைக்கப்படும். பைனரி டிஜிட் (binary digit) எனும் வார்த்தைகளிலிருந்ததே பிட் (bit) எனும் வார்த்தை உருவானது. பிட் என்பது ஒரு தகவலின் மிகச் சிறிய அலகாகும்.


ஒரு பிட்டை மாத்திரம் கொண்டு ஒரு எழுத்தையோ அல்லது குறியீட்டையோ உருவாக்கி விட முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பிட்டுகளை ஒரு அணியாக ஒன்று சேர்க்கும்போதே எதனையும் (ஒரு தகவலை) அர்த்தமுள்ளதாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு 8 பிட்டுகள் சேர்ந்ததை ஒரு பைட் (byte) எனப்படும். ஒரு பைட் மூலம் 256 வெவ்வேறான எழுத்துக்களையோ அல்லது குறியீடுகளையோ வெளிப்படுத்தலாம். அதாவது எட்டு பிட்டுகளை மூலம் 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். இதன் மூலம் கீபோர்டிலுள்ள ஆங்கில பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளையும் உருவாக்க முடிகிறது.

உதாரணமாக் "A" எனும் எழுத்தானது கணினியில் 01000001 என பதியப்படுகிற்து. (அதாவது கணினி மின் சுற்றில் 8 Switches / ஆளிகள் இயங்குகின்றன) அதேபோல் " * " எனும் குறியீடு 00101010 என பதியப்படுகிறது. Cat எனும் பெயரை பதிய 010000110110000101110100 பிட்டுகள் இவ்வாறு அணி சேர்கின்றன. இவை மூன்று எழுத்துக்களைக் குறிக்கின்றன. எனவே இது மூன்று பைட்டுகளைக் கொண்டிருக்கும்.
பைட் கொண்டு ஒரு சிறு அளவிலான தகவலையே சேமிக்க முடியும் தகவலின் அளவு கிலோ பைட், மெகாபைட், கிகா பைட் போன்றவற்றிலேயே குறிப்பிடப்படுகின்றன.

ஒரு Kilobyte (KB) கிலோ பைட் என்பது 1024 பைட்டுகளுக்குச் சமனானது. ஒரு சராசரி எம்.எஸ். வர்ட் ஆவணம் 100 பைட்டுகளைக் கொண்டிருக்கும்.

ஒரு மெகா பைட் Megabyte (MB) என்பது 1024 கிலோ பைட்டுகள் கொண்டது. 1024 மெகா பைட்டுகளை ஒரு கிகாபைட் (Gigabyte) கொண்டிருக்கும்.

பைல்களின் அளவு பைட்டிலும் கிலோ பைட்டிலும் அளவிடப்படுகின்றன. ஒரு தசாப்தத்துக்கு முன்பு வரை அனேகமன மென்பொருள்கள் 1.44 மெகா பைட் அளவு கொண்ட ப்லொப்பி டிஸ்கிலேயே கிடைக்க்கப்பெற்றன. அப்போது வெளிவந்த மென்பொருள்க்ளின் அளவு மிகவும் சிறியதாயிருந்தன. அதனால் ஒரு மென்பொருளை ஓரிரு ப்லொப்பி டிஸ்கில் அடக்கக் கூடியதாயிருந்தது. எனினும் தற்காலத்தில் வெளி வரும் மென்பொருள்களின் அளவு முன்னரை விடப் பல மடங்கு பெரிதாகவுள்ளன. உதராணமாக் எம்.எஸ்.ஒபிஸ் மென்பொருள் தொகுப்பின் அண்மைய பதிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கொள்ளளவு சுமார் 700 மெகா பைட்டுகளாகவுள்ளது. அதாவது ஒரு சீடியின் அளவுக்குச் சமமானது.

மென்பொருள்களைப் போன்றே ஹாட் டிஸ்கின் கொள்ளளவுகளும் தற்போது நினைத்தும் பார்க்க முடியாத அளவுகளில் கிடைக்கின்றன. பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு ஹாட் டிஸ்கின் உச்ச கொள்ளளவு 1 கிகாபைட்டிலும் குறைவாகவேயிருந்தன. பின்னர் அதன் கொள்ளளவு 10, 20, 40, 60, 80, 120, 160, 300 500 கிகாபைட் என படிப்படியாக மிக வேகமாக அதிகரித்து தற்போது ஒரு டெராபைட் அளவிலும் கூட ஹாட் டிஸ்க்குகள் கிடைக்கப் பெறுகின்றன. ஒரு டெரா பைட் என்பது 1024 கிகா பைட்டுகளுக்க்ச் சமனானது.

டேட்டாவை சேமிக்கும் ப்ளொப்பி, சிடி, டிவிடி, ஹார்ட் டிஸ்க், பென் ட்ரைவ் போன்றவற்றில் அதிக அளவில் டேட்டா சேமிக்கப் படுகையில் அவற்றின் அளவைக் குறிக்க கிலோபைட், மெகாபைட், கிகாபைட் போன்ற அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.


பிட் (Bit) 0 அல்லது 1 ஐக் குறிக்கும்

4 பிட்டுகளின் சேர்க்கையை நிப்பல் (Nibble) என்ப்படும்.

8 பிட்டுகளின் சேர்க்கையை ஒரு பைட் (Byte) எனப்படும்.

16 பிட்டுகளின் சேர்க்கையை ஒரு வர்ட் (Word) எனப்படும்.

1024 பைட்டுகள்(Byte) சேர்ந்தவை ஒரு கிலோபைட் Kilobyte (KB) எனப்படும்.

1024 கிலோ பைட்டுகள் சேர்ந்தவை ஒரு Megabyte (MB) எனப்படும். ஒரு மெகாபைட் 1200 எழுத்துக்களாலான 873 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்திற்குச் சமமானது.

1024 மெகா பைட்டுகள் சேர்ந்தவை ஒரு கிகா பைட் Gigabyte (GB)எனப்படும். இதனுள் 200 பக்கங்கள் கொண்ட 4473 புத்தகங்களை அல்லது 3 MB அளவு கொண்ட 341 படங்களை அல்லது 4 MB அளவு கொண்ட 256 பாடல்களைச் அடக்கிவிட்லாம்.

1024 கிகா பைட்டுகள் சேர்ந்தவை ஒரு Terabyte (TB) எனப்படும். ஒரு டெராபைட்டில் 200 பக்கங்கள் கொண்ட 4,581,298 புத்தகங்களை அல்லது 3 MB அளவு கொண்ட 349,525 படங்களை அல்லது 4 MB அளவு கொண்ட 262,144 MP3 பாடல்களைச் சேமிக்கலாம். மேலும் இது 650 MB அளவு கொண்ட 1,613 சீடிக்களுக்கு அல்லது 4.38 GB அளவு கொண்ட 233 டிவிடிக்களுக்கு அல்லது 25GB அளவு கொண்ட 40 ப்ளூரே டிஸ்க்குகளுக்குச் சமமானது.

டெரா பைட்டுடன் நின்று விடவில்லை. Petabyte (PB), Exabyte (EB), Zettabyte (ZB), Yottabyte (YB) என எதிர் காலத்தில் தொடர இருக்கிறது.

Cell Phone Rate & Compare


உங்க‌ளுக்கு வேண்டிய‌ க‌ம்பெனியின் செல்போன் விலை ம‌ற்றும் 2 ம‌ற்றும் 3 க‌ம்பெனி போன்க‌ளின் ஒப்பிட்டு பார்க்கும் வ‌ச‌தி இன்றையா அறிமுக‌ம் ந‌ம‌து வ‌ச‌திக்கேற்ப்ப‌ தேர்ந்து எடுத்துபார்க்கும் வ‌ச‌தி நேர‌டியாக‌ வாங்கும் வாய்ப்பு போன்ற‌ அனைத்தும் ஒருங்கிணைந்த‌து‌ இணைய‌தள‌ம்.




Online Zip File


Zip மென் பொருள் இல்லாத கணினியில் இந்த இணைய தளத்தின் உதவியுடன் எந்த ஒரு File-யும் Zip File ஆகா மாற்றி Pack Up  எடுத்து வைக்க அல்லது E-Mail  அனுப்ப மிகவும் உறுதுணைபுரியும் இணைய தளம்




PDF - Online Converter & PDF Creator மென்பொருள்




Adobe Reader மிகவும் பாதுகாப்புமிக்கது நம்பாகமானது அடுத்தவர்கள் Edit செய்ய முடியாது நாம் பயன்படுத்தும் கணினியில் பணி செய்ய விரும்பும் போது Adobe Reader மென்பொருள் கணினியில் இருப்பதில்லை இணைய இணைப்பு இருந்தால் கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று Word, Photo’s & cad file ஆகியவற்றை adobe Reader file மாற்றிக்கொள்ளலாம்.


PDF Creator மென்பொருள்


இணைய இணைப்பு எப்போதும் பயன்படுத்த விரும்பாத போது கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவி தொடர்ந்து பயன்படுத்தலாம். 


இந்த மென்பொருள் நிறுவி நாம் Adobe Reader-க மாற்ற நினைக்கும் Word, Photo’s & cad file ஆகியவற்றை Priter- வழியாக சென்று  adobe Reader file மற்றும் PNG, JPEG, BMP, PCX, TIFE, PS, EPS, TXT, PSD, PCL, Raw, SVG,  போன்ற Format-களில் மாற்றி சேமித்து பயன்படுத்தி கொள்ளலாம்



மச்ச ராசி பலன் - ஆண் & பெண்



ஆண்


இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.

நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.

வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.

வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.

வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.

வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.

இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.

இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.

இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.

இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.

மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.

மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.

மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.

நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.

மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.

மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.

மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.

மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.

இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.

இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.

கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.

கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.

இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.

வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.

வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.

வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.

தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.

வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.

வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.

இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்.

முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.

முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.

முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.



பெண்



ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.

நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.

நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.

மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.

மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.

மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.

மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.

கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.

தலையில் மச்சம்

தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.

ஆடம்பர வாழ்வு

நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.

கன்னத்தில் மச்சம்

காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.

இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.

கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.

அந்தஸ்து

மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.

காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.

கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.

இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.

மார்பில் மச்சம்

பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.

நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.

தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம்

கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.

பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

தொடை

இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.


ஆதாரம் - நன்றி :- சாமுத்ரிகா லட்சணம் நூல்.



கணினி கலை சொற்கள்


absolute address - தனி முகவரி
absolute cell address -
தனித்த நுண்ணறை முகவரி
access -
அணுக்கம், அணுகல்
accuracy -
துல்லியம்
action -
செயல்
active cell -
இயங்கு கலன்
address modification -
முகவரி மாற்றம்
address -
முகவரி
addressing -
முகவரியிடல்
album -
தொகுப்பு
algorithm -
வழிமுறை
algorithm -
நெறி முறை
algorithmic language -
நெறிப்பாட்டு மொழி
alignment -
இசைவு
allocation -
ஒதுக்கீடு
alphabetic string -
எழுத்துச் சரம்
alphanumeric -
எண்ணெழுத்து
alphanumeric sort -
எண்ணெழுத்து வரிசையாக்கம்
alphanumeric -
எண்ணெழுத்து
and gate -
உம்மை வாயில்
animation -
அசைவூட்டம்
anti virus -
நச்சு நிரற் கொல்லி
append -
பின் தொடர், பின்சேர்
apperarance -
தோற்றம்
application -
செயலி
application -
பயன்பாடு
applications oriented language -
பயன்பாட்டு நோக்கு மொழி
applications program -
பயன்பாட்டு நிரல்கள்
applications programmer -
பயன்பாட்டு நிரலர்
applications programming -
பயன்பாட்டு நிரலாக்கம்
applications software -
பயன்பாட்டு மென்பொருள்
architecture -
கட்டமைப்பு
archive -
பெட்டகம்
archive -
ஆவணக்காப்பகம்
area search -
பரப்பில் தேடல்
arithmetic expression -
எண்கணிதக் கோவை
arithmetic operation -
எண்கணித வினை
arithmetic operator -
எண்கணித வினைக்குறி
array -
வரிசை, அணி
arrow key(direction key) -
திசைப் பொத்தான்
artificial intelligence -
செயற்கை நுண்ணறிவு
assembler -
பொறிமொழியாக்கி
assembly language -
பொறி மொழி
audio -
ஒலி
audio -
ஒலியுணர்
automated data processing -
தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்
automatic -
தன்னியக்க
autopilot -
தன்னியக்க வலவன்
auxiliary function -
துணைச் செயல் கூறு
axes -
அச்சுகள்
background -
பின்னணி
backspace -
பின்னழிக்க, பின்வெளி
backspace -
பின்நகர்வு
bad sector -
கெட்ட துண்டம்
bar chart -
பட்டை வரைபடம்
bar code -
பட்டைக் குறிமுறை
bar printer -
பட்டை அச்சுப்பொறி
bar-code scanner -
பட்டைக் குறிமுறை வருடி
batch processing -
தொகுதிச் செயலாக்கம்
bebugging -
பிழைவிதைத்தல்
bill -
விலைப்பட்டியல்
binary device -
இரும நிலைக் கருவி
binary digit -
இரும இலக்கம்
binary number -
இரும எண்
binary operation -
இருமச்செயற்பாடு
binary system -
இரும எண்முறை
binary -
இரும
bit map -
பிட்டுப்படம்
bit mapped screen -
பிட்டுப் படத்திரை
bit -
நுண்மி, துணு, பிட்டு
blank character -
வெற்றுரு
block diagram -
கட்ட வரைபடம்
block -
கட்டம், தொகுதி
blog -
வலைப்பதிவு
boot -
தொடக்கு
Brennen -
எரிக்க
browser -
உலாவி
browsing -
மேலோடல்
button(key) -
பொத்தான்
byte -
எண்பிட்டு, எண்ணுண்மி
cache memory -
பதுக்கு நினைவகம்
caculations -
கணக்கீடுகள்
caculator -
கணிப்பான்
calculating -
கணக்கிடல்
calculator mode -
கணிப்பான் நிலை
cancel -
நீக்கு
capacity -
கொள்திறன்
caps lock -
மேலெழுத்துப் பூட்டு
carriage return(CR) -
ஏந்தி மீளல்
catalog -
அடைவு
CD player -
குறுவட்டு இயக்கி
cell pointer -
நுண்ணறைச்சுட்டி
cell -
சிற்றறை, நுண்ணறை
center -
மையம், மையப்படுத்து
central processing unit(CPU) -
மைய செயலகம்
central processor -
மையச் செயலி
channel -
தடம்
character code -
உருக்குறிமுறை
character generator -
உரு ஆக்கி
character map -
உரு விவரப்படம்
character recognition -
உரு அறிதல்
character set -
உருக்கணம்
character string -
உருச்சரம்
character -
வரியுரு
character -
உரு
characteristic -
படி
chart -
வரைபடம்
clear -
துடை
click -
சொடுக்கு
click - ‘
கிளிக்’, அழுத்து
client -
சேவைக்கான பயன்பாடு
client -
வாங்கி
clone -
நகலி, போலிகை
close -
மூடு
closed file -
மூடிய கோப்பு
coaxial cable -
அச்சு ஒன்றிய வடம்
code -
நிரற்தொடர்
code -
குறிமுறை
collection -
திரட்டல்
color coding -
வண்ணக் குறிமுறை
color graphics -
வண்ண வரைவியல்
column split -
நெடுவரிசைப் பிரிப்பு
column -
நிரல், நெடுவரிசை
column -
நெடுவரிசை
command key -
கட்டளைத்திறவு
command -
கட்டளை, ஆணை
comment -
குறிப்புரை
common storage -
பொதுத் தேக்கம்
communication -
தொடர்பு
communications link -
தொடர்பு இணைப்பு
communications processor -
தொடர்பு செயலகம்
communications satellite -
தொடர்பு செயற்கைக்கோள்
communications software -
தொடர்பு மென்பொருள்
compact disc (CD) -
இறுவட்டு
compaction -
நெருக்கம்
comparative operator -
ஒப்பீட்டு இயக்கி
compare -
ஒப்பிடு
comparison -
ஒப்பீடு
compilation -
தொகுத்தல்
compiler language -
தொகுப்பு மொழி
compiler -
தொகுப்பி
component -
உறுப்புக்கூறு
compuserve -
கணிச்சேவை
computation -
கணிப்பு
computer code -
கணிப்பொறி நிரல்
computer game -
கணிப்பொறி விளையாட்டு
computer graphics -
கணிப்பொறி வரைவியல்
computer network -
கணிப்பொறி வலையமைப்பு
computer operations -
கணிப்பொறி சார் செயல்பாடுகள்
computer user -
கணிப்பொறி பயனர்
computer utility -
கணிப்பொறிப் பயனமைப்பு
computer -
கணிப்பொறி
computer-aided manufacturing -
கணிப்பொறிவலய உற்பத்தி
computerised data processing -
கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம்
computerization -
கணிப்பொறிமயமாக்கல்
computerized database -
கணிப்பொறித் தரவுத் தளம்
computing -
கணிப்பு
condition -
நிபந்தனை, நிலை
configuration -
அமைவடிவம்
console -
முனையம்
continuous scrolling -
தொடர் உருளல்
control key -
கட்டுப்பாட்டுத்திறவுகோல்
control program -
கட்டுப்பாட்டு நிரல்
control statement -
கட்டுப்பாட்டுக் கூற்று
control system -
கட்டுப்பாட்டு அமைப்பு
conversion -
மாற்றம்
convert -
மாற்று
cookie -
நினைவி
coordinates -
ஆயத்தொலைவுகள்
copy holder -
நகல் தாங்கி
copy protection -
நகல் காப்பு
copy -
நகல்
cordless -
தொடுப்பில்லா
core storage -
வளையத் தேக்கம்
cost analysis -
விலை பகுப்பாய்வு
cost benefit analysis -
விலை பயன் பகுப்பாய்வு
cost effectiveness -
விலை பயன் திறன்
costing -
விலையிடல்
counter -
எண்ணி
create -
படை (படைப்பு)
cursor control -
சுட்டிக் கட்டுப்பாடு
cursor key -
சுட்டிப்பொத்தான்
cursor tracking -
சுட்டி பின் தொடரல்
cursor -
சுட்டி
curve fitting -
வளைகோட்டுப் பொருத்தம்
custom software -
தனிப்பயன் மென்பொருள்
customize -
தனிப்பயனாக்கு
cut -
வெட்டுக
cut -
வெட்டு
cyber -
மின்வெளி
data -
தரவு
delete -
அழிக்க
design -
வடிவமைப்பு
digital -
எண்முறை
discovery -
கண்டறிதல்
driver -
இயக்கி
DRM: -
காப்புரிமை
edit -
தொகுக்க
firewall -
அரண்
floppy -
நெகிழ்வட்டு
folder -
உறை
format -
வடிவூட்டம், வடிவூட்டு
function -
செயற்பாடு
gallery -
காட்சியகம்
graphics -
வரைகலை
guest -
வருனர்
home -
முகப்பு, அகம்
homepage -
வலையகம், வலைமனை
icon -
படவுரு
information -
தகவல்
interface -
இடைமுகப்பு
interpreter -
வரிமொழிமாற்றி
invention -
கண்டுபிடிப்பு
IRC -
இணையத் தொடர் அரட்டை
LAN -
உள்ளகப் பிணையம்
license -
உரிமம்
link -
இணைப்பு, தொடுப்பு, சுட்டி
live cd -
நிகழ் வட்டு
log in -
புகுபதிகை, புகுபதி
log off -
விடுபதிகை, விடுபதி
media player -
ஊடக இயக்கி
menu -
பட்டியல்
microphone -
ஒலிவாங்கி
network -
பிணையம், வலையம்
object -
பொருள்
offline -
இணைப்பறு
online -
இணைப்பில்
package -
பொதி
password -
கடவுச்சொல்
paste -
ஒட்டுக
patch -
பொருத்து
plugin -
சொருகு, சொருகி
pointer -
சுட்டி
portal -
வலை வாசல்
preferences -
விருப்பத்தேர்வுகள்
preview -
முன்தோற்றம்
processor -
முறைவழியாக்கி
program -
நிரல்
proprietary -
தனியுரிம
RAM -
நினைவகம்
redo -
திரும்பச்செய்க
refresh -
மீளேற்று
release -
வெளியீடு
repository -
களஞ்சியம்
row -
நிரை, குறுக்குவரிசை
screensaver -
திரைக்காப்பு
server -
வழங்கி
settings -
அமைப்பு
shortcut -
குறுக்குவழி
shutdown -
அணை
sign in -
புகுபதிகை, புகுபதி
sign off -
விடுபதிகை, விடுபதி
skin -
ஆடை
space -
வெளி, இடைவெளி
speaker -
ஒலிபெருக்கி
spreadsheet -
விரி தாள்
subtitle -
உரைத்துணை, துணையுரை
system -
கணினி
tab -
தத்தல்
table -
அட்டவணை
terminal -
முனையம்
theme -
கருத்தோற்றம், தோற்றக்கரு
thumbnail -
சிறுபடம்
undo -
திரும்பப்பெறுக
update -
இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து
upgrade -
மேம்படுத்து, மேம்படுத்தல்
URL -
முகவரி
version -
பதிப்பு
video -
நிகழ் படம்
view -
பார்க்க
virus -
நச்சு நிரல்
volume -
ஒலியளவு
wallpaper -
மேசைப்பின்னணி
window -
சாளரம்
wireless -
கம்பியில்லா
wizard -
வழிகாட்டி
worksheet -
பணித் தாள்
அகலப்பட்டை - இணைப்பு (Breitband)
அலுவலகப் பயன்பாடு - Office Application
அழித்தல் - Deletion, Removal
அழிப்பான், எரேசர் - Eraser
அனுமதி - Permission
ஆவணங்கள் - Documents
இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் - IE (or) Internet Explorer
இணைய இயங்குதளம் - Web Operating System
இயக்கிகளை - Drivers
இயங்குதளம் - Operating System
உலவி - Browser
உலவி - Web Browser
எண்முறை (டிஜிடல்) உரிமைகள் முகாமைத்துவம் - Digital Rights Management
ஐகான் - Icon
ஒலிப்பான்+ஒலிவாங்கி - Head phone with Mic
ஒலிவட்டுகள் - Compact Disk
ஒளியிழைகளைக்கான - Lichtleiter
கடவுச்சொல் - Password
கடனட்டை - Credit Card
காணொளி - Video
குறுக்கு தட்டாச்சு - Shortcut
கையடக்கக் கணினி, கருவிகள் - PDA (or) Personal Digital Assistant
கோப்பு - File
கோப்புகள் - Files
கோப்புப்பகிர்வான் - File Sharing
சிடியில் எரித்தல் - CD Burning
சுட்டிகளில் - Links
செயலியை - program
செல்பேசி - Mobile / cell phone
சொடுக்கி - klick
டீம்வியூவர் - Team viewer
தகவல் - Information, Data
தரவிறக்கம் - Download
தரவுத்தளமாக - Database
நிறுவுதல் - Installation
நினைவகம் - Memory (RAM)
நீட்சிகள் - Firefox (add-ons)
பகிரப்பட்ட கோப்புகள் - Shared Files
பணிச்சூழல் - Working Environment
பயன்பாடுகள் - Software Applications
பயனர் கணக்கு - User Account
பார்க்க - Read
மடிக்கணினி - Laptop
மாய - Virtual
மாற்றியமைக்க - Edit
மீட்பான் - Recovery tool
முரண்பாடு - incompatible
மூலவரைவு - Source Code
மென்நூல் - E-book
மென்பொருள் - Software / Application
மைக்ரோசாப்ட் ஆபீஸ் - Microsoft Office
வருடச் சந்தா - Yearly fee
வரைகலை - Graphics
வன்பொருள் - Hardware
வன்வட்டு - Hard disk
விண்டோஸ் விஸ்டா - Windows Vista
வீட்டுக்கணினி - Home PC
வீட்டுத் தொலைபேசி - Home based Fixed Wired / Wireless phone
வேகமான இணைய இணைப்பு - Fast Internet Connection