Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Evo - மவுஸ்







எதிர் காலத்தில் மவுஸ் இப்படி தான் இருக்கும் மிகவும் எளிதாக பயன்படுத்த கூடிய வகையில் பாருங்கள் அதன் பயன்களை

ஆங்கில எழுத்து பலன்





உங்கள் பெயரின் ஆங்கில முதல் எழுத்துக்கான பலன்கள்



A

ஆங்கிலத்தின் முதலெழுத்து. இதைப் பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்கள் அற்புத சக்தி படைத்தவர்களாயிருப்பர். இவர்கள் வாழ்வில் வேகமாக உயர்வடைவார்கள். திடமான எண்ணம் கொண்டவர்கள்.ஆக்கபூர்வமானவர்கள். ஒளிவு மறைவு கபடு சூது அற்றவர்கள். நிர்வாகத்திறன், அறிவு, சுதந்திர உணர்வு, சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபாடு ஆகிய குணநலன்கள் நிரம்பப் பெற்றவர்கள். மொத்தத்தில் மிக மிக அதிர்ஷ்டசாலிகள்.



B
திட்டமிட்டு செயலாற்றுதல், நேர்மை, ஆன்மீகம், சமாதானம் ஆகியவற்றை இவ்வெழுத்துக்குறிக்கும். இந்த எழுத்து முதலெழுத்தாக வருவது நல்லது.



C

இவ்வெழுத்து முதலெழுத்தானால் பலம் அதிகம். ஆண்மைத்தனம், சுறுசுறுப்பு , படபடப்பு இவற்றை குறிக்கும் எழுத்து. இவ்வெழுத்தை பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்கள் கலையார்வம் மிக்கவர்கள், கலைகளால் புகழடைவார்கள். மூளையினால் உழைப்பதையே விரும்புவாரகள்.



D

இது பெயரின் முதலெழுத்தாக வருவதைத் தவிர்க்கவும். இவ்வெழுத்து பெயரின் முதலெழுத்தானால் உடல்நிலையில் என்னேரமும் கோளாறு உள்ளவர்களாயிருப்பார்கள். துணிச்சல், சலியாத உழைப்பு, முன்னேற்றம் ஆகியக குணங்கள் இந்த எழுத்துக்கு உண்டு.



E

Aயுடன் இணைந்து வந்தால் நல்லது. ஜீரண சக்தியையும், நரம்புசக்தியையும் இது பாதிப்பதால் அளவுக்கதிகமாக பெயரில் இவ்வெழுத்து வரவேண்டாம். உங்கள் பெயரில் இவ்வெழுத்து முதலெழுத்தானால் ஆபத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நீங்கள் பிறருக்கும் பிறர் உங்களுக்கும் பரஸ்பர உதவி செய்து கொள்வீரகள்.


F

பேச்சை விட செயல்திறன் அதிகம் கொண்டது இவ்வெழுத்து. பிடிவாதம், நிர்வாகத்திறன், உடல்வளம், துணிச்சலை இவ்வெழுத்துக் குறிக்கிறது.



G

பெயரில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இவ்வெழுத்து வரலாம். பொறுமை, சகிப்புத்தன்மை, சாமர்த்தியம், சத்தியம் இவற்றைக் குறிக்கும் எழுத்து இது. நோய்நொடிகள் விரைவில் குணமாகும். தன்னம்பிக்கை நிறைய உண்டு. எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். தீர்க்கதரிசிகள். திட்டமிட்டு செயலாற்றுவதில் நிபுணர்கள். புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வார்கள்.



H

வீண்செலவு சக்திவிரயம்.இவற்றை கட்டுபடுத்தும்.பரபரப்பு படபடப்பு இருக்காது .நிம்மதி ,சிறந்த உத்தியோகம், சிக்கலற்ற வாழ்க்கை ,ஆரோக்கியமான சுற்றுசூழல்ஆகியவற்றை குறிக்கும் .இவ்வெழுத்து பெயரில்முதலெழுத்தாகவருவதுமிகவும் நல்லது



I

இது புள்ளியுள்ள மெய்யெழுத்து .கடையெழுத்தாயின் நல்லது. பெயரில் ஒருமுறைக்கு மேலாக இவ்வெழுத்து வரவேண்டாம். வந்தால்நரம்பு தளர்ச்சி ஏற்படும். இவ்வெழுத்து முதலில் வந்தாலும் பரவாயில்லை. திடீர்திடீரென அவ்வப்போது எண்ணங்கள் தோன்றி ,செயல்வடிவம் கண்டுவிடும். இவர்கள் மிகவும் உசாரானவர்கள். தன்னம்பிக்கை மிக்கவர்கள் தாமதங்களை வெறுப்பவர்கள் .வேகமாக செயல்படுபவர்கள். எதிர்ப்புகளை சமாளிப்பதில் வல்லவர்கள். மொத்தத்தில் அதிர்ஷ்டசாலிகள்.



J

எழுத்தாளர்களை குறிப்பது இந்த எழுத்து. கலைஞர்களையும்,வியாபாரிகளையும் கூட இது குறிப்பிடுகிறது. தனக்கென ஒருதனிப்பாணி, பயணங்களில் நாட்டம், சலனபுத்தி இரட்டைமனம் ஆகியகுணங்களை கொள்வீர்கள். புது புது சிநேகங்களில் நாட்டம் கொள்வீர்கள். புதிய கருத்துக்களை ஈர்த்து கொள்வீர்கள். சலனத்தால் கவனம் சிதற வாய்ப்புண்டு. உலகநடப்புகளை உடனுக்குடன் அறீவீர்கள். மொத்தத்தில் திறமைசாலிகள்.


K

புகழ், பெருமை, பொருள்,பெயர், கெளரவம், சமூகசேவை, தாய்மை உணர்ச்சி ஆகியவற்றை இவ்வெழுத்து குறிக்கும் .கலைஞர்கள் இதை பெயரின் முதலெழுத்தாகக் கொள்வது நல்லது.



L

இவ்வெழுத்து முதலெழுத்தாக வந்தால் மிக நல்லது காரியவாதம், தந்திரம், ஆணையிடுதல் இவற்றை இந்த எழுத்து குறிக்கிறது. நினைத்ததெல்லாம் நடத்திகாட்டுவார்கள். ஞாபக சக்தி அதிகம்உண்டு. அடுத்தவரை கெடுக்கமாட்டார்கள்.



M

பெயரில் பல இடங்களில் வந்தால் நல்லது . உழைப்பு, விடாமுயற்சி,ரசிகத் தன்மை, நுட்பமான அறிவு ஆகியன இந்த எழுத்தின் குணங்களாகும். தன்கையே தனக்கு உதவி என்பதற்கு இவ்வெழுத்தை அடையாளமாகக் கூட கொள்ளலாம். வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டால் இவ்வெழுத்தை விலக்கலாம்.



N

உணர்ச்சிகளை தூண்ட வல்லது. சக்திகளை விரயமாக்குவது, ரத்த ஓட்டத்தடை, வாயுத்தொல்லை, நரம்புத்தளர்ச்சி, ஆகிய நோய்கள் வரக்காரணமாகும். தன்னிச்சைப்படியே நடந்து கொள்வர்.



O

இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் எழுத்து. ஆதலால் ஆரம்பத்திலும் கடைசியிலும் வரக்கூடாது. மனோபலம் வாக்குபலம் நிறைந்த எழுத்து. தன்னிச்சைப்படியே நடந்து கொள்வர் எனினும் ஆராய்ந்தே முடிவெடுப்பீர்கள். நல்ல பலன்கள் தானாகவே உங்களை வந்தடையும் .


P

பாடகர்கள், பேச்சாளர்கள் இதை முதலெழுத்தாக்கி பெயர் சூடலாம். நிர்வாகதிறன், ரசிகதன்மை, முன்னேற்றம், கவர்ச்சி ஆகியவற்றை இவ்வெழுத்து குறிக்கிறது .



Q

A,I,J போன்ற எழுத்துக்களுடன் சேர்ந்து வந்தால் நல்லது. எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்கள். கடின உழைப்பாளிகள் உறுதியும் ஊக்கமும் குன்றாதவர்கள். விடாமுயற்சியில் சிலந்திக்கு சமமானவர்கள். ஊருக்கு உழைப்பவர்கள். அடுத்தவர்கள் உயர ஏணிப்படியாக ஆவார்கள் .



R

பெயரின் முதலெழுத்தாக வந்தால் நல்லது. இடையில் வந்தால் மத்திமம், சுறுசுறுப்பு, துடிப்புடன் செயலாற்றுதல், தன்னம்பிக்கை ஆகிய குணங்களை குறிக்கிறது.



S

பெயரின் முதலெழுத்தாக வந்தால் நல்லது. கூட G யும் வரும்படி பார்த்து கொள்ளவும். சமாதானம் அத்தோடு சண்டை, புகழ்ச்சி, இகழ்ச்சி, அன்பான பேச்சு அல்லது கூர்மையான தாக்கு போன்ற இருவேறு எண்ணங்களுடன் செயல்படுவீர்கள்.



T

D,M இவற்றைவிட வலுவானது. தீவிரவாதிகளை குறிக்கிறது. உங்கள் தீர்மானங்கள் மாற்றங்களின்றி பிறரால் ஏற்றுகொள்ளப்படும் .யோசனை சொல்வதில் நிபுணர்கள். உடல்வலிமை பெறுவீர்கள்.


U

ஆரம்பத்திலோ முடிவிலோ வந்தால் நல்லது. தெய்வாம்சம் நிரம்பியது. அடுத்தவர்கள் உங்கள்மீது அளவற்ற நம்பிக்கை வைப்பார்கள். கல்வி ,கேள்விகளில் அதிக ஞானம் இருக்கும். பொருளாதார சிக்கல் ஏற்படாது. உழைத்து உயர்வீர்கள். தெரியாதவற்றை தெரியாது என்று சொல்லிக் கொள்ள தயங்கமாட்டீர்கள் .



V

தெய்வசக்தி, சுறுசுறுப்பு, தளராத நம்பிக்கை, பொதுநலம் ஆகியவற்றை குறிக்கும் எழுத்து இது. நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்.



W

முன்னேற்றம், வாதிடுவதில் சாமார்த்தியம், அனுசரிப்பு, நிம்மதி, சகிப்புதன்மை ஆகியவற்றை குறிக்கும். இவ்வெழுத்தும் நன்மை பயக்க கூடியதே.



X

வாழ்க்கையில் அநேக மாற்றங்கள் நிகழும். ஒரு புதிரானது இவ்வெண். அறியமுடியாதவற்றை அறிந்து கொள்ளும் சக்தி இதற்கு உண்டு, ஆராய்ச்சியாளர்களும், ஆராய்ச்சிகூடங்களும் இவ்வெண்ணைண பெயரின் முதலெழுத்தாகவோ அல்லது நடுவில் வருமாறோ உபயோகப்படுத்தி பயன் பெறலாம்.



Y

மென்மையான சுபாவம், பரிதாபம், இனிமையான பேச்சு, தன்மையாக நடத்தல் ஆகியவை இவ்வெழுத்தின் சிறப்பம்சமாகும். A யுடன் இவ்வெழுத்தும் சேர்ந்து கொண்டால் மிகவும் நல்லது. மன நிம்மதியும் வாழ்வில் சந்தோசமும் ஏற்படும்.

Z

பேச்சில் நயம், தந்திரம், காரியவாதம் இவற்றை இவ்வெழுத்து குறிக்கும். நரம்பு சம்பந்தமான வியாதிகளை தோற்றுவிக்கும். புத்தி சாதுரியம் நிரம்ப உண்டு.








New Laptop - Desktop - 2 in 1





புத்தம் புதிய வசதிகள் கொண்ட 2-in-1 ஆகா பயன்படுத்தும் வ்கையில் அமைந்த இந்த Laptop & Desktop  கணினி

நீர் குமிழி மேஜிக் - வீடியோ




எனக்கு இந்த வீடியோ மிகப்பிடித்து இருந்தது அதை உங்கள் உடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் நீர் குமிழி மேஜிக் - வீடியோ

நூலகம் புது யுகத்தில்



மக்கள் அனைவரும் விரும்பும் இடம் நூலகம் இந்த நூலகம் புதிய யுகத்தில் இப்படித்தான் இருக்கும் நூலகம் மற்றும் அல்ல நவீன மீட்டிங் ஹால், கல்யாண மண்டபம், இசை நிகழ்ச்சி இப்படி ஒரு நாள் நடக்கும்


High Technical - உலகம்





நமது வாழ்கைக்கு துணை நிற்க்கும் High Technical தொழிலில் நுட்ப இப்போது நம் வாழ்விலும் விரைவில் காலை முதல் இரவு இப்படி தான் வாழ்கை வர வேண்டும் கண் கொள்ள காட்சியும் நமது கனவு உலகம் இது தான் இது நடக்க நமது அரசியல்வாதிகளுக்கு நல்ல மனம் வேண்டும் Sorry பணம் வேண்டும் வீடியோவை காணுங்கள்






  

மரக்கன்று - தமிழ் வருடம்





இயற்கையை காக்க மரங்களை நடவேண்டும் என்பதை நம் முன்னோர்கள் ஜாதகங்கள் வாயிலாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்.இந்த ராசிக்கு,இந்த நட்சத்திரத்துக்கு குறிப்பிட்ட மரத்தை நட வேண்டும் என்பது ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ஜாதகமே இல்லாதவர்கள் எந்த மரத்தை நடுவது? இதற்கும் ஒரு வழி இருக்கிறது. நீங்கள் பிறந்த தமிழ் ஆண்டு தெரிந்தால் போதும். அந்த ஆண்டுக்கென்று வகுக்கப்பட்டுள்ள மரத்தை நடலாம் என்கிறார்கள். இப்படி அவரவர் பிறந்த தமிழ் ஆண்டுக்குரிய மரத்தை நட்டால் யோகங்கள் கிடைக்குமாம்.ஆனால், இப்படி மரம் நடும் முன் சில சடங்குகளை கடைப்பிடிக்க வேண்டும்.


நெல், கோதுமை,பச்சைப்பயறு,துவரை,உளுந்து,மொச்சை,கடலை,எள் ஆகிய 9 தானியங்களை தலா ஒரு கைப்பிடி எடுத்துக் கொண்டு அதை பித்தளை பாத்திரத்திலோ அல்லது மரப்பாத்திரத்திலோ மண்பானையிலலோ ஊற வைத்து அந்த தண்ணீரை நாம் நட்ட மரக்கன்றுக்கு நட்ட அன்றோ அல்லது அடுத்த நாளோ ஊற்ற வேண்டியது முக்கியம். மரத்தை நட்ட பிறகு நாம் ஏற்கனவே தண்ணீரில் இட்டு ஊறவைத்திருந்த நவதானியங்களை எடுத்து பறவைகளுக்கு போட வேண்டும்.


இதற்கு பிறகு வழக்கமாக சாதாரணமாக அந்த மரக்கன்றுக்கு நீர்பாய்ச்சி வரலாம். திருமணமான தம்பதிகள் திருமணம் ஆனவுடனேயே தங்களது ராசிக்கோ அல்லது இப்போது நாம் சொல்லப்போகும் தமிழ் ஆண்டுப்படி அதற்குரிய மரங்களை நட்டால் வாழ்கையில் துன்பங்கள் விலகி நல்ல வாழ்வு பெறலாம் என்கிறது சாத்திரங்கள்.


இனி தமிழ் ஆண்டு படி பிறந்தவர்கள் நடவேண்டிய மரங்களை பார்க்கலாம்.


பிரபவ- கருங்காலி மரம்

விபவ-அக்ரூட்மரம்

சுக்ல-அசோக மரம்

பிரஜோர்பத்தி-பேயத்தி மரம்

ஆங்கீரஸ்- அரசுமரம்

திருமுக-அரைநெல்லி

பவ-அலயாத்தி

யுவ-அழிஞ்சில் மரம்

தாது- ஆச்சாமரம்

ஈஸ்வர-ஆலமரம்

வெகுதான்ய-இலந்தை மரம்

பிரமாதி-தாளைபனைமரம்

விக்ரம-இலுப்பை மரம்

விஷு-ருத்திராட்சம்

சித்ரபானு- எட்டி மரம்

யுவபானு- ஒதியம்

தாரண- கடுக்காய் மரம்

பார்த்திவ- கருங்காலி மரம்

வியய- கருவேலமரம்

சர்வஜித்- பரம்பை மரம்

சர்வதாரி- குல்மோகூர்மரம்

விரோதி- கூந்தல் பனை

விக்ருதி- சரக்கொன்றை

கர- வாகை மரம்

நந்தன- செண்பகம்

விஜய-சந்தனம்

ஜய- சிறுநாகப்பூ

மன்மத- தூங்குமூஞசி மரம்

துன்முகி- நஞ்சுகண்டாமரம்

ஏவிம்பி- நந்தியாவட்டை

விகாரி- நாவல்

சார்வரி- நுணாமரம்

பிலவ- நெல்லி மரம்

சுபகிருது- பலா மரம்

சோபாகிருது- பவழமல்லி மரம்

குரோதி- புங்கம் மரம்

விசுவாவக- புத்திரசீவிமரம்

பராபவ- புரசுமரம்

பிலவங்க- புளிய மரம்

கீலக- புன்னை மரம்

சவுமிய- பூவரசு மரம்

சாதாரண-மகிழமரம்

விரோதிகிருத- மஞ்ச கடம்பை

பரீதாபி- மராமரம்

பிரமாதீச- மருதமரம்

ஆனந்த-மலைவேம்பு

ராட்சஸ- மாமரம்

நள-முசுக்கொட்டை மரம்

பிங்கள- முந்திரி

காளயுக்தி-கொழுக்கட்டை மந்தாரை

ஸித்தார்த்தி -தேவதாரு

ரவுத்ரி- பனை மரம்

துன்மதி-ராமன்சீதா

துந்துபி-மஞ்சள் கொன்றை

ருத்ரோத்காரி-சிம்சுபா

குரோதன-சிவப்புமந்தாரை

அட்சய-வெண்தேக்கு.

 
நன்றி :-  . . .

உணவு - Fast Food






Fast Food உணவு பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய நிலையில் எந்த ஒரு வளரும் பருவ மாணவரிடமும், பிடித்த உணவு எது என்று கேட்டால் நமக்கு அதிர்ச்சியே மிஞ்சும்.

பலரும் தங்களுக்கு பிடித்த உணவாக பீசா, பஸ்டா, வடா பாவ், பாவ்பாஜி, நூடுல்ஸ் மற்றும் ப்ரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளையே சொல்வார்கள். இந்த உணவு வகைகள் பயனற்ற உணவுகள் அல்லது ஆங்கிலத்தில் "ஜன்க் புட்" என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய உணவு வகைகளில் ஒன்றுகூட பயனுள்ள மற்றும் சத்துள்ள உணவுப் பொருள் கிடையாது என்பதை மாணவ சமுதாயம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற பயனற்ற உணவுகள்(ஜன்க் புட்) பார்ப்பதற்கு நன்றாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும், நாகரிகமாகவும் இருக்கலாம். ஆனால் அவற்றால் உடலுக்கு நேரும் தீமைகளைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். அந்தவகை உணவுகள் செரிமானம் ஆவது மிகவும் கடினம்.

செரிமான அமைப்பு அல்லது மூளை ஆகியவற்றுக்கு சீரான ரத்தம் கிடைக்க வேண்டுமெனில் உங்களின் உடல் நன்றாக இயங்க வேண்டும். இதனால்தான் நன்றாக சாப்பிட்டவுடன் தூங்க வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது. அந்த உணர்வு ஏற்படுவதால் உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை.

பயனற்ற உணவுகள்(ஜன்க் புட்) செரிமானம் ஆவதற்கு நீண்டநேரம் எடுத்துக் கொள்கின்றன. மேலும் அவை உங்களின் செரிமானப் பாதையில் தங்கி விடுகிறது. இதனால் உங்களுக்கு அசிடிட்டி, சோம்பேறித்தனம் மற்றும் பருக்கள்(பிம்பிள்ஸ்) போன்றவை ஏற்படுகின்றன. மேலும் அதனால் ஏற்படும் மிக மோசமான விளைவு என்னவெனில், உங்களின் கவனிப்பு திறன் பாதிப்படைவதுதான்.

அந்த உணவுகள் உங்களின் ஜீரண அமைப்பில் எரிச்சலை உண்டாக்குகிறது. அந்த உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களின் தரம் சரியானதல்ல. அந்த உணவுகளால் உங்களுக்கு எந்த கலோரியும் கிடைப்பதில்லை மற்றும் வைட்டமின் சத்துக்களும் கிடைப்பதில்லை. மேலும் இத்தகைய உணவுகளால் மலச்சிக்கலும் உண்டாகிறது.

மாணவர்கள் இத்தகைய உணவுகளை காலை உணவாக அதிகம் உட்கொள்கிறார்கள். பல சமயங்களில் அவை ஜீரனமாகிவிட்டாலும், சில சமயங்களில் பிரச்சினையாகி விடுகின்றன. இதனால் அன்றைய முழு நாளும் அவஸ்தைப்பட வேண்டியுள்ளது. தேர்வு நேரங்களில் மாணவர்கள் இது விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, உப்புமா அல்லது சிறிதளவு சாதம் போன்றவையே பிரச்சினையற்ற உணவுகள். தேர்வு சமயங்களில் இவையே உகந்தவை.

சமைப்பதற்கு எளிதாகவும், சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருந்தால் மட்டும் ஒரு உணவு நல்ல சத்தான மற்றும் பிரச்சினையற்ற உணவாகிவிடாது. தேர்வு சமயங்களில் படித்தலோடு சேர்ந்து, உணவு விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களின் திட்டமெல்லாம் வீணாகிவிடும்.


Oxford English Dictionay - Portable




நமக்கு வேண்டிய ஆங்கில வார்த்தைக்கு பொருள் தெரிந்து கொள்ள மிகப்புகழ் பெற்ற Oxford English Dictionary,  இது ஒரு portable மற்றும் Sound-வுடன் தரப்படுவுள்ளது இதனால் ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்புகளை தெரிந்து கொள்ளலாம்



Help Line




Dear Sir / Madam / Friends,


Very Important Useful Shareable info

1. If you see children Begging anywhere in TAMIL NADU, please contact:"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.

2.Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor  address. http://www.friendstosupport.org/

3. Engineering Students can register in http://www.campuscouncil.com/ to attend Off Campus for 40 Companies.

4. Free Education and Free hostel for Handicapped/Physically Challenged children.
Contact:- 9842062501 & 9894067506.

5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY
done by
Kodaikanal PASAM Hospital . From 23rd March to 4th April by German Doctors.
Everything is free. Contact : 045420-240668,245732

6. If you find any important documents like Driving license, Ration card,Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any near by Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So let all of us lend our hands to fight GLOBAL WARMING.

Plant more Trees.
Don't waste Water & Electricity.
Don't use or burn Plastics

8.It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.

"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"

9.Special phone number for Eye bank and Eye donation: 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information about
how to donate eyes plz visit these sites. http://ruraleye.org/

10.Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Sathya Sai Baba Institute Banglore.
Contact : 080-28411500

11. Medicine for Blood Cancer!!!!
'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone.
Cancer Institute in Adyar, Chennai
Category: Cancer
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar
Chennai -600020

Landmark: Near Michael School

Phone: 044-24910754, 044-24910754 ,044-24911526, 044-24911526 ,044-22350241, 044-22350241

12.Please CHECK WASTAGE OF FOOD

If you have a function/party at your home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke, This is the number of Child helpline. They will come and collect the food. Please circulate this message which can help feed many children.

AND LETS TRY TO HELP INDIA TO BE A BETTER PLACE TO LIVE IN

Please Save Our Mother Nature for
"OUR FUTURE GENERATIONS"





தமிழ் - ஆங்கிலம் - Dictionary - தொழில்நுட்ப வார்த்தைக்கு





ஒரு Technical வார்த்தைக்கு அர்த்தம் தேட வேண்டும் என்றால் மிகவும் பிரபலமான அகராதி OXFORD Dictionary தான். பிறகு சில மென்பொருட்கள். நாம் பயன்படுத்தும் கணினியில் மென்பொருள் இருப்பதில்லை அல்லது  இணைய இணைப்பு இருந்தால் வேண்டும்  இணையதளத்திற்கு சென்று நமக்கு வேண்டிய வார்த்தைக்கு பொருள் அதிக நேரம் ஆகும் இந்த அட்டவணை இருந்தால் உடனுக்குடன் பார்த்துக்கொள்ளலாம் 93 பக்கம் கொண்டது .





கணினியை உபயோகபடுத்தும் முறைகள்

நாம் சரியான முறையில் கணினியை உபயோகபடுத்தும் முறைகள் 


தோள்  மற்றும் முதுகு 




கைகள் மற்றும் விரல்கள்







கண்கள்




அமரும் அமைப்பு



இதன் மூலம் நமது கண்கள் மற்றும் முதுகு, கைகள், தோள்கள், பிடிப்பும், வலி  போன்றவற்றை நோய்களில் இருந்து பாதுகாக்கலாம்.

கை & விரல்களுக்கான பயிற்சி










திருப்பதியிலில் கோயில் சேவை செய்ய



ஸ்ரீவெங்கடாஜலபதியின் இருப்பிடம் திருப்பதியில்  தங்கி 1வாரம் பக்தர்களுக்கு சேவை செய்யலாம் ஒரு நாளுக்கு குறைந்தது 6 மணி நேரம் சேவையில் செய்ய வேண்டும். சனிக்கிழமையன்று சேவையில் ஈடுபடுவோருக்கு சிறப்பு தரிசனம் உண்டு. குறைந்தது 10 பேர் கொண்ட குழுவை கீழ்க்கண்ட முகவரில் ஒன்றில் பதிய வேண்டும்.அப்படிப் பதிந்தால் திருப்பதியில் நாம் விரும்பும் 7 (or) 10 நாளுக்கு சேவை செய்யச் செல்லலாம்.இதற்கு கட்டணம் கிடையாது.திருப்பதியில் சாப்பாடு, தங்குமிடம் இலவசம்.அதுவும் தேவஸ்தான ஊழியராக அந்த நாட்களில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்,நீங்கள் சேவா ஊழியர் என்பதற்கு அடையாளமாக கழுத்தில் காவித் துண்டு அணியா வேண்டும். ஸ்ரீவாரி சேவா உறுப்பினராகுங்கள்

ஸ்ரீவாரி சேவா :- Mr கண்ணபிரான் 94431-36763.0431-27822887.


ஸ்ரீவாரி சேவா அமைப்பு :- A.P.நாகராஜன்

திருப்பதி தேவஸ்தான கோவில்,

வெங்கட்நாராயணா சாலை,

தி.நகர்,

சென்னை-17.

Phone:- 044-24343535.


ஆங்கில மாதத்தின் முதல் சனி மதியம் 2 முதல் 4 மணிக்கு வாருங்கள்!



ஏ.பி.என். குரூப்

புதிய எண் :-16,T.T.K.சாலை,

முதல் கிராஸ் தெரு,

ஆழ்வார்பேட்டை,

சென்னை-18.

044-24334700,24331776.



நேரடி தொடர்புக்கு

சேவா சதர்ன் ஹால்,மேல்திருப்பதியில் பஸ் நிலையம் அருகில் உள்ளது.

PUBLIC RELATION OFFICER,

THIRUMALA THIRUPATHI DEVASTHANAM,

KABILA THEERATHAM ROAD,

THIRUPATHI.

0877-226456.

Mr V.S.சுந்தரவரதன் - 044-22232526, 9444221661


ரோஜாவும் அர்த்தமும்

இன்றைய உலகில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்குமிடையில் அன்பை பரிமாறிக் கொள்ள முதலிடம் வகிப்பது ரோஜாப்பூவே,


இவ் ரோஜாப்பூக்கள் பற்பல நிறங்களில் காணப்படுவது அதிசயமே தான்.

ஒவ்வொரு நிற ரோஜாப்பூவும் என்ன அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றது என்பதை சற்று விரிவாக நோக்கினால். . .



சிவப்பு ரோஜாக்கள் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும். மரியாதை மற்றும் பேரார்வத்தை வெளிப்படுத்தவும் இந்த ரோஜாக்கள் உதவும். ஆழ்மனதில் இருக்கும் அழகையும் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை சிவப்பு ரோஜாக்களுக்கு உண்டு



இளஞ்சிவப்பு ரோஜாவை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வழங்கலாம்



பாராட்டுவதற்கும், வாழ்த்து கூறவும், நட்பு பாராட்டுவதற்கும் ஏற்றது `பிங்க்` ரோஜா.



மெலிதான இளம்சிவப்பு ரோஜாக்கள் அழகை வெளிப்படுத்தக் கூடியது. கருணை, மகிழ்ச்சி, ஆளுமைத்திறனை வெளிப்படுத்த சிறந்தது இந்த ரோஜாக்கள்.


அடர்ந்த `பிங்க்' நிற ரோஜா நன்றி தெரிவிக்க கொடுக்கப்பட வேண்டியது.



இளம்நீல நிற ரோஜா, முதல் பார்வையில் இதயத்தை கொள்ளை கொண்டவருக்கு கொடுக்கப்பட்டால் அவரது அன்பை மேலும் பெருக்கித்தரும்



வெள்ளை ரோஜா உயிரில் கலந்த தூய காதலை வெளிப்படுத்த வழங்கப்படுவதாகும். திருமணம் நிச்சயமான சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கலாம். பயபக்தி, பணிவைக் காட்டவும் வெள்ளை ரோஜா பொருத்தமானது. குற்றமற்றவன் என்பதைச் சொல்லவும் வெள்ளை ரோஜா ஏற்றது


நட்பு, மகிழ்ச்சி, பெருமிதம், சுதந்திரம் போன்றவற்றில் உங்களுக்கு இருக்கும் அக்க றையை வெளிக்காட்ட மஞ்சள் ரோஜா பொருத்த மானது.


பவள நிற ரோஜா உங்கள் விருப்பங்களை உங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு உணர்த்த ஏற்றது.


 இளஞ்சிவப்பும், வெண்மையும் கலந்த `பீச்' நிற ரோஜா தன்னடக்கத்தை காட்டும்


ஆரஞ்சு நிற ரோஜாவை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் வழங்கலாம். கவர்ச்சியாய் தோன்ற விரும்புபவர்களும் இந்நிற ரோஜாவை சூடிக் கொள்ளலாம்


சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜாக்களை பாராட்டுத் தெரிவிக்க வழங்கலாம்.


 

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ரோஜாக்களை இணைத்து கொடுப்பது எண்ணங்களை ஈர்த்து மனதை உருக வைக்கும்.

எளிய காதல் தூதுவன் ரோஜாப் பூக்கள்தான். ஒற்றை ரோஜா உறுதியான காதலைச் சொல்லும். இரட்டை ரோஜா அல்லது இரட்டை நிறம் கலந்த ரோஜா, என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்கும் பொருளில் கொடுப்ப தாகும். இனிய அழைப்புகளுக்கும் இரட்டை ரோஜா வழங்கலாம்.


வெளிர்நிற ரோஜாக்கள் எல்லாம் நட்பை வெளிப்படுத்துவன. 12 ரோஜாக்கள் சேர்ந்த மலர்ச்செண்டு (பொக்கே) நன்றி தெரிவிக்கவும், 25 ரோஜாக்களின் இணைப்பு வாழ்த்துச் சொல்ல வும், 50 ரோஜாக்கள் சேர்ந்தது நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தவும் ஏற்றது.

மலர்ந்திருக்கும் நேரங்களில் மனிதர்களை மகிழச் செய்யும் பண்பு மலர்களுக்கே உரியது. அன்பையும், காதலையும் இதமாகச் சொல்லும் ரோஜாக்களை உங்கள் இதயம் கவர்ந்தவர்களுக்கு கொடுங்கள்.