ஆங்கில எழுத்து பலன்

உங்கள் பெயரின் ஆங்கில முதல் எழுத்துக்கான பலன்கள்A

ஆங்கிலத்தின் முதலெழுத்து. இதைப் பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்கள் அற்புத சக்தி படைத்தவர்களாயிருப்பர். இவர்கள் வாழ்வில் வேகமாக உயர்வடைவார்கள். திடமான எண்ணம் கொண்டவர்கள்.ஆக்கபூர்வமானவர்கள். ஒளிவு மறைவு கபடு சூது அற்றவர்கள். நிர்வாகத்திறன், அறிவு, சுதந்திர உணர்வு, சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபாடு ஆகிய குணநலன்கள் நிரம்பப் பெற்றவர்கள். மொத்தத்தில் மிக மிக அதிர்ஷ்டசாலிகள்.B
திட்டமிட்டு செயலாற்றுதல், நேர்மை, ஆன்மீகம், சமாதானம் ஆகியவற்றை இவ்வெழுத்துக்குறிக்கும். இந்த எழுத்து முதலெழுத்தாக வருவது நல்லது.C

இவ்வெழுத்து முதலெழுத்தானால் பலம் அதிகம். ஆண்மைத்தனம், சுறுசுறுப்பு , படபடப்பு இவற்றை குறிக்கும் எழுத்து. இவ்வெழுத்தை பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்கள் கலையார்வம் மிக்கவர்கள், கலைகளால் புகழடைவார்கள். மூளையினால் உழைப்பதையே விரும்புவாரகள்.D

இது பெயரின் முதலெழுத்தாக வருவதைத் தவிர்க்கவும். இவ்வெழுத்து பெயரின் முதலெழுத்தானால் உடல்நிலையில் என்னேரமும் கோளாறு உள்ளவர்களாயிருப்பார்கள். துணிச்சல், சலியாத உழைப்பு, முன்னேற்றம் ஆகியக குணங்கள் இந்த எழுத்துக்கு உண்டு.E

Aயுடன் இணைந்து வந்தால் நல்லது. ஜீரண சக்தியையும், நரம்புசக்தியையும் இது பாதிப்பதால் அளவுக்கதிகமாக பெயரில் இவ்வெழுத்து வரவேண்டாம். உங்கள் பெயரில் இவ்வெழுத்து முதலெழுத்தானால் ஆபத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நீங்கள் பிறருக்கும் பிறர் உங்களுக்கும் பரஸ்பர உதவி செய்து கொள்வீரகள்.


F

பேச்சை விட செயல்திறன் அதிகம் கொண்டது இவ்வெழுத்து. பிடிவாதம், நிர்வாகத்திறன், உடல்வளம், துணிச்சலை இவ்வெழுத்துக் குறிக்கிறது.G

பெயரில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இவ்வெழுத்து வரலாம். பொறுமை, சகிப்புத்தன்மை, சாமர்த்தியம், சத்தியம் இவற்றைக் குறிக்கும் எழுத்து இது. நோய்நொடிகள் விரைவில் குணமாகும். தன்னம்பிக்கை நிறைய உண்டு. எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். தீர்க்கதரிசிகள். திட்டமிட்டு செயலாற்றுவதில் நிபுணர்கள். புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வார்கள்.H

வீண்செலவு சக்திவிரயம்.இவற்றை கட்டுபடுத்தும்.பரபரப்பு படபடப்பு இருக்காது .நிம்மதி ,சிறந்த உத்தியோகம், சிக்கலற்ற வாழ்க்கை ,ஆரோக்கியமான சுற்றுசூழல்ஆகியவற்றை குறிக்கும் .இவ்வெழுத்து பெயரில்முதலெழுத்தாகவருவதுமிகவும் நல்லதுI

இது புள்ளியுள்ள மெய்யெழுத்து .கடையெழுத்தாயின் நல்லது. பெயரில் ஒருமுறைக்கு மேலாக இவ்வெழுத்து வரவேண்டாம். வந்தால்நரம்பு தளர்ச்சி ஏற்படும். இவ்வெழுத்து முதலில் வந்தாலும் பரவாயில்லை. திடீர்திடீரென அவ்வப்போது எண்ணங்கள் தோன்றி ,செயல்வடிவம் கண்டுவிடும். இவர்கள் மிகவும் உசாரானவர்கள். தன்னம்பிக்கை மிக்கவர்கள் தாமதங்களை வெறுப்பவர்கள் .வேகமாக செயல்படுபவர்கள். எதிர்ப்புகளை சமாளிப்பதில் வல்லவர்கள். மொத்தத்தில் அதிர்ஷ்டசாலிகள்.J

எழுத்தாளர்களை குறிப்பது இந்த எழுத்து. கலைஞர்களையும்,வியாபாரிகளையும் கூட இது குறிப்பிடுகிறது. தனக்கென ஒருதனிப்பாணி, பயணங்களில் நாட்டம், சலனபுத்தி இரட்டைமனம் ஆகியகுணங்களை கொள்வீர்கள். புது புது சிநேகங்களில் நாட்டம் கொள்வீர்கள். புதிய கருத்துக்களை ஈர்த்து கொள்வீர்கள். சலனத்தால் கவனம் சிதற வாய்ப்புண்டு. உலகநடப்புகளை உடனுக்குடன் அறீவீர்கள். மொத்தத்தில் திறமைசாலிகள்.


K

புகழ், பெருமை, பொருள்,பெயர், கெளரவம், சமூகசேவை, தாய்மை உணர்ச்சி ஆகியவற்றை இவ்வெழுத்து குறிக்கும் .கலைஞர்கள் இதை பெயரின் முதலெழுத்தாகக் கொள்வது நல்லது.L

இவ்வெழுத்து முதலெழுத்தாக வந்தால் மிக நல்லது காரியவாதம், தந்திரம், ஆணையிடுதல் இவற்றை இந்த எழுத்து குறிக்கிறது. நினைத்ததெல்லாம் நடத்திகாட்டுவார்கள். ஞாபக சக்தி அதிகம்உண்டு. அடுத்தவரை கெடுக்கமாட்டார்கள்.M

பெயரில் பல இடங்களில் வந்தால் நல்லது . உழைப்பு, விடாமுயற்சி,ரசிகத் தன்மை, நுட்பமான அறிவு ஆகியன இந்த எழுத்தின் குணங்களாகும். தன்கையே தனக்கு உதவி என்பதற்கு இவ்வெழுத்தை அடையாளமாகக் கூட கொள்ளலாம். வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டால் இவ்வெழுத்தை விலக்கலாம்.N

உணர்ச்சிகளை தூண்ட வல்லது. சக்திகளை விரயமாக்குவது, ரத்த ஓட்டத்தடை, வாயுத்தொல்லை, நரம்புத்தளர்ச்சி, ஆகிய நோய்கள் வரக்காரணமாகும். தன்னிச்சைப்படியே நடந்து கொள்வர்.O

இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் எழுத்து. ஆதலால் ஆரம்பத்திலும் கடைசியிலும் வரக்கூடாது. மனோபலம் வாக்குபலம் நிறைந்த எழுத்து. தன்னிச்சைப்படியே நடந்து கொள்வர் எனினும் ஆராய்ந்தே முடிவெடுப்பீர்கள். நல்ல பலன்கள் தானாகவே உங்களை வந்தடையும் .


P

பாடகர்கள், பேச்சாளர்கள் இதை முதலெழுத்தாக்கி பெயர் சூடலாம். நிர்வாகதிறன், ரசிகதன்மை, முன்னேற்றம், கவர்ச்சி ஆகியவற்றை இவ்வெழுத்து குறிக்கிறது .Q

A,I,J போன்ற எழுத்துக்களுடன் சேர்ந்து வந்தால் நல்லது. எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்கள். கடின உழைப்பாளிகள் உறுதியும் ஊக்கமும் குன்றாதவர்கள். விடாமுயற்சியில் சிலந்திக்கு சமமானவர்கள். ஊருக்கு உழைப்பவர்கள். அடுத்தவர்கள் உயர ஏணிப்படியாக ஆவார்கள் .R

பெயரின் முதலெழுத்தாக வந்தால் நல்லது. இடையில் வந்தால் மத்திமம், சுறுசுறுப்பு, துடிப்புடன் செயலாற்றுதல், தன்னம்பிக்கை ஆகிய குணங்களை குறிக்கிறது.S

பெயரின் முதலெழுத்தாக வந்தால் நல்லது. கூட G யும் வரும்படி பார்த்து கொள்ளவும். சமாதானம் அத்தோடு சண்டை, புகழ்ச்சி, இகழ்ச்சி, அன்பான பேச்சு அல்லது கூர்மையான தாக்கு போன்ற இருவேறு எண்ணங்களுடன் செயல்படுவீர்கள்.T

D,M இவற்றைவிட வலுவானது. தீவிரவாதிகளை குறிக்கிறது. உங்கள் தீர்மானங்கள் மாற்றங்களின்றி பிறரால் ஏற்றுகொள்ளப்படும் .யோசனை சொல்வதில் நிபுணர்கள். உடல்வலிமை பெறுவீர்கள்.


U

ஆரம்பத்திலோ முடிவிலோ வந்தால் நல்லது. தெய்வாம்சம் நிரம்பியது. அடுத்தவர்கள் உங்கள்மீது அளவற்ற நம்பிக்கை வைப்பார்கள். கல்வி ,கேள்விகளில் அதிக ஞானம் இருக்கும். பொருளாதார சிக்கல் ஏற்படாது. உழைத்து உயர்வீர்கள். தெரியாதவற்றை தெரியாது என்று சொல்லிக் கொள்ள தயங்கமாட்டீர்கள் .V

தெய்வசக்தி, சுறுசுறுப்பு, தளராத நம்பிக்கை, பொதுநலம் ஆகியவற்றை குறிக்கும் எழுத்து இது. நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்.W

முன்னேற்றம், வாதிடுவதில் சாமார்த்தியம், அனுசரிப்பு, நிம்மதி, சகிப்புதன்மை ஆகியவற்றை குறிக்கும். இவ்வெழுத்தும் நன்மை பயக்க கூடியதே.X

வாழ்க்கையில் அநேக மாற்றங்கள் நிகழும். ஒரு புதிரானது இவ்வெண். அறியமுடியாதவற்றை அறிந்து கொள்ளும் சக்தி இதற்கு உண்டு, ஆராய்ச்சியாளர்களும், ஆராய்ச்சிகூடங்களும் இவ்வெண்ணைண பெயரின் முதலெழுத்தாகவோ அல்லது நடுவில் வருமாறோ உபயோகப்படுத்தி பயன் பெறலாம்.Y

மென்மையான சுபாவம், பரிதாபம், இனிமையான பேச்சு, தன்மையாக நடத்தல் ஆகியவை இவ்வெழுத்தின் சிறப்பம்சமாகும். A யுடன் இவ்வெழுத்தும் சேர்ந்து கொண்டால் மிகவும் நல்லது. மன நிம்மதியும் வாழ்வில் சந்தோசமும் ஏற்படும்.

Z

பேச்சில் நயம், தந்திரம், காரியவாதம் இவற்றை இவ்வெழுத்து குறிக்கும். நரம்பு சம்பந்தமான வியாதிகளை தோற்றுவிக்கும். புத்தி சாதுரியம் நிரம்ப உண்டு.
No comments:

Post a Comment