மருத்துவ குறிப்புகள்





அருகம்புல்லை சுத்தமாகக் கழுவி நன்றாக மென்று பல் வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.

சாதாரண வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் நீர் மோரில் உப்பு, கறிவேப்பிலை கலந்து, திரியும் வரை சுடவைத்து இரண்டு மூன்று முறை அருந்தினால் குணமாகும்.

தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் சிலருக்கு கண் பார்வை மசமசவென்று தெளிவில்லாமல் இருக்கும். இந்தப் பிரச்சனை இருப்பவர்கள், நல்லெண்ணெயை நன்கு பொங்கவிட்டு, அதில் ஐந்தாறு மிளகுகளைத் தட்டிப் போட்டுத் தலைக்குத் தேய்த்துக் கொள்வது நல்லது. இதனால் கண்பார்வை தீட்சண்யம் ஆவதுடன், ஒற்றைத் தலைவலி, நீர்பாரம் முதலிய பிரச்சனைகளும் வராது.

வயிற்றில் இரைச்சல் இருந்தால், கொதிக்கும் நீரில் கொஞ்சம் ஓமம் போட்டு மூடி வையுங்கள். சிறிது நேரம் கழித்து வடிகட்டி பாலையும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுங்கள். வயிற்று இரைச்சல் நின்றுவிடும்.

கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு டீஸ்பூன் அளவிற்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க குடற்பூச்சிகள் முழுவதும் அன்றே வெளிவந்துவிடும். இதற்கு கடும் பத்தியம் கிடையாது. குழந்தைகளின் வயதிற்கேற்ப அளவைக் கூட்டியோ, குறைத்தோ கொடுக்கலாம்.

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.



ஜோதிடம் கற்க - E-Book




ஜோதிடம் கற்க ஆவல் உள்ள எவரும் புரிந்து கொள்ள எளிய வழி முறைகளை அடங்கிய இந்த E-Book மூலம் கற்கலாம்







Font Converter - NHM Converter 1.0 - எழுத்துவுரு மாற்றி



தமிழ் எழுத்துக்களை பற்பல விதங்களில் நாம் Type செய்கிறோம் ஒருவர் பயன்படுத்தும் எழுத்துவுரு மற்றவர் பார்த்து படிக்க முடியாமல் கட்டம் கட்டமாக காட்சியளிக்கும் இதை தவிர்க்க இந்த எழுத்துவுரு மாற்றி மென்பொருள் (NHM Converter 1.0) மூலம் நாம் பயன்படுத்தும் Bamini, Diacritic, Shreelipi, Softview,  Tap, Tam, TSCII, Unicode, Vanvil, எழுத்துவுருக்கு மாற்றி நமக்கு வந்த கடிதங்களை படிக்கலாம் மேலும் தேவைப்படும் எழுத்துவுருவை மாற்ற கீழ்க்கண்ட இணைய தளம் உதவும்

 

நூலகம் புது யுகத்தில்



மக்கள் அனைவரும் விரும்பும் இடம் நூலகம் இந்த நூலகம் புதிய யுகத்தில் இப்படித்தான் இருக்கும் நூலகம் மற்றும் அல்ல நவீன மீட்டிங் ஹால், கல்யாண மண்டபம், இசை நிகழ்ச்சி இப்படி ஒரு நாள் நடக்கும்


ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணைய தளம்




ஆடியோ பைல்களை ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக (WAV, MP3, AAC, AIF, AU, FLAC, MP4, OGG, WMA, iPhone Ringtone ) கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் ஒரு மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும் மென்பொருள் இல்லாமால் ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய  இந்த இணையதளம் உதவி செய்கிறது.







ஏலக்காய் - சீரகம் - மருத்துவம்


ஏலக்காய்


ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல், பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும்.

மன இறுக்கத்தைக் குறைத்து உடல் புத்துணர்ச்சி பெற ஏலக்காய் பயன்படுகிறது.

பல் மற்றும் வாய் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு ஏலக்காய் நல்ல தீர்வாக அமையும்.

செரிமானத்திற்கு உதவும். இதனால்தான் நெய் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளில் அவசியமாக ஏலக்காயை சேர்ப்பார்கள்.

குரல் வளை மற்றும் தோல் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.

மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.




சீரகம் 
சீரகம் பொதுவாக உடலுக்கு நல்லது என்று பலருக்கும் தெரியும். அதனை எந்த விஷயத்திற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றுதான் தெரிவதில்லை.

வாந்தி எடுத்தவர்களுக்கு, வெறும் கடாயில் சீரகத்தைப் போட்டு வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்த கஷாயத்தைக் கொடுக்க வாந்தி நிற்கும்.

சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை பழச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.



“ஸ்கிரின் ஷாட்” - இணையதளத்தை புகைப்படம் எடுக்க உதவும் தளம்

                   

தளத்தின் முகப்பு பக்கத்தை அப்படியே புகைப்படம் போல சேமித்து கொள்வது ஸ்கிரின் ஷாட்” கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவுகளில் மேற்கோள் காட்டவும் புகைப்படமாக இணைக்கவும் ஸ்கிரின் ஷாட்கள். அவசியம் ஸ்கிரின் ஷாட் மென் பொருள் இல்லாத கணினியில் இந்த இணைய தளத்தின் உதவியுடன்  ஸ்கிரின் ஷாட் கிளிக் செய்யும் வசதியை அளிப்பதோடு அவற்றை மற்றவர்களோடு கிர்ந்து கொள்ளும் வசதியையும் வழங்குகிறது. ந்த இணையதளத்தை ஸ்கிரின்ஷாட்டாக மாற்ற விரும்புகிறோமோ அதன் இணையமுகவரியை இங்கே சமர்பித்தால போதுமானது 20 நொடிக்குள் ஸ்கிரின்ஷாட் ரெடி.   
 
 
 

சர்வே + பணம்




All Global

Ciao

Cint/CPX

Clear Voice Surveys

Common Knowledge

Emailinform

e-Rewards

Field Facts Worldwide

GfK NOP

Global Test Market

GMI Research

GoZing

Greenfield Online

Harris Poll Online (Harris Interactive)

IMRB International

InterfaceAsia

InternetSurveyPanel.com

Ipoints

Ipsos Insight

Ipsos iSay

LightSpeed

NFO / MySurvey.com

NFO Interactive

Nielsen

NOP World

Onlinesurveys.com

Opinion Square

Opinion World

OTX

Peanut Labs

Permission Research

PickThem

Pinecone Research

ReRez

Research Now

Saga Populus panel

sMoni

Socratic Forum

Survey.com

Surveysavvy

SurveySpot (SSI)

Synovate

The Panel Station

TNS

Toluna

Trendscan

WorldOne Research

You Gov

Your2Cents (Common Knowledge)

Zoompanel


சர்வே உலகளவில் பேசப்படும் ஒரு சொல். இன்று உள்ள துறைகளில் புள்ளியல் துறையும் மிக முக்கியமானது. இதன் மூலம் நமது வருவாய் உயர்த்திக் கொள்ள அதிகளவில் நமக்கு வாய்ப்புக்கள் உள்ளது மேலே உள்ள அனைத்தும் உலகளவில் இயங்கி கொண்டு இருக்கும் புள்ளியல் துறை கம்பெனி இதில் நம்மை பற்றிய முழு விபரங்கள் அனைத்தும் தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும் பின்னர் அவர்கள் Online (or) நமது E-Mail முகவரிக்கு சர்வே Link தரப்படும் இதை தொடர நமது சர்வே பணி ஆரம்பம் ஆகிவிடும் குறைந்த பட்சம் 3 நிமிடத்தில் இருந்து அதிக பட்சம் 40 நிமிடம் வரை தொடரும் மேற்க்கண்ட கம்பெனிகளில் 5 முதல் 50,000 மதிப்பெண் அல்லது 1டாலர் முதல் 20டாலர் நாம் பணி செய்து முடிக்கும் சர்வேக்கு ஊதியமாக வழங்கப்படும், சர்வே கம்பெனி அனைத்திலும் குறிப்பிட்ட மதிப்பெண் அல்லது டாலர் சேர்ந்தவுடன் நாம் எடுத்து கொள்ளலாம் அந்தந்த நாட்டு பணமதிப்பாக நமக்கு செக் அல்லது Paypal என கம்பெனி விதிமுறைக்கு உட்பட்டு பணம் வழங்கப்படும். இன்னும் சில கம்பெனி புகழ் பெற்ற வர்த்தக நிறுவனங்களின் Gift Voucher தரப்படும், இவை நாம் கைக்கு வர 4 வாரம் முதல் 8 வாரம் ஆகும்.

சர்வே பணி என்பது மிக எளிதானது நாம் அன்றாடம் பயன்படுத்து உணவு பொருள்கள், அழகு சாதனம், மின்சாதனம், கணினி மென் பொருள் – வன் பொருள், மோட்டார் வாகனம், உல்லாச பயணங்கள், வங்கிகள், போன்றவற்றின் மிக முக்கியமான உலக புகழ் பெற்ற வர்த்தக நிறுவனங்களின் - மதிப்பு, உங்கள் தேவை, நீங்கள் பயன்படுத்தும் விதம், என அனைத்து வித கேள்விகளுக்கு சில-பல Click-கள் செய்வதே பணி.

இது போல் சர்வே கம்பெனிக்கு பலரை அறிமுகம் செய்து சேர்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.


Voice Mail - ஒலிச் செய்தி மின்னஞ்சல் & வலைத்தளம் வழியாக அனுப்ப




தொலைபேசியில் அனுப்புவது போன்று மின்னஞ்சலிலும் ஒலிச் செய்தியை (Voice Mail) அனுப்பலாம். உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவேண்டிய செய்தியை உங்கள் குரலில் பதிவு செய்து அனுப்ப முடியும் இங்கு காட்டப்பட்ட “Click to Record” என்பதை கிளிக் பண்ணிய பின் உங்கள் குரல் ஒலியை பதிவு செய்யவும். உங்கள் செய்தியைத் தெரிவித்து முடிந்ததும் “Stop” என்பதை கிளிக் பண்ணவும்.

இதில் “Listen” என்பதைக் கிளிக் பண்ணி நீங்கள் பதிவுசெய்த செய்தி சரியா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம். மாற்ற வேண்டும் தோன்றின் “Record Again” என்பதை கிளிக் பண்ணி மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம்.

மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு அனுப்பவேண்டின் “Send to a Friend” என்பதையும், உங்கள் வலைத்தளம் மூலமாக அனுப்பவேண்டின் “Post on the Internet” என்பதையும் தெரிவு செய்யலாம். நீங்கள் “Send to a Friend” என்பதை தெரிவு செய்திருப்பின் “Your email” என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் “Friend’s email(S)” என்பதில் அனுப்பவேண்டிய உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து “Send” என்பதை அழுத்தினால் போதும். உங்கள் ஒலிச் செய்தி அவர்களுக்கு அனுப்பப்பட்டுவிடும்.

 












windows 7 USB drive ல் Install செய்வது






Windows 7


DVD Drive இல்லாதவர்கள் USB Drive மூலமாக

Windows 7  Install செய்து கொள்ளலாம்

USB Flash Drive (4GB)

Windows 7 or Vista files.

இனி எவ்வாறு Windows 7 bootable - USB Flash ல் உருவாக்குவது.

USB Portல் USB Flash Drive யினை NTFS ஆக Format செய்யவும்

Windows7/Vista DVD யினை அதற்குரிய Drive ல் இடவும்

பின் dvd Drive மற்றும் Flash Drive களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை (drive letter) பார்க்கவும். My Computer ல் காணலாம்

இங்கு நான் DVD Drive க்கு 'G' யும் Flash Drive க்கு 'H' எனவும் கொடுத்துள்ளேன்

Start menu-> Run->Type cmd

G: CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்

இங்கு G or உங்கள் DVD drive letter யினை தரவும்

அடுத்து CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்

BOOTSECT.EXE /NT60 H: என டைப் செய்து என்டர் தட்டவும்.

Windows 7/Vista DVD உள்ள கோப்புகள் அனைத்தையும் USB flash drive காப்பி செய்யவும்

உங்கள் flash Drive ஆனது windows 7 bootable Flash Drive ஆக மாறிவிடும்

நீங்கள் எந்தக் கணணிக்கும் உங்கள் windows 7 bootable Flash Driveல் இருந்து Windows 7 நிறுவிக் கொள்ளலாம்

Bios ல் boot priority யினை USB from the HDD or CD ROM drive க்கு மாற்றி பின் வழக்கம் போலவே நிறுவிக் கொள்ளலாம்