எண் கணித ஜோதிடம்


1 ம் நம்பர் காரங்களுக்கு...

1ம் தேதி...பிறர் அபிப்பிராயங்களைக் கேட்பதில் பொறுமை இருக்காது. உரத்த குரலில் மறுத்து பேசுவார்கள். மனதில் உள்ளதை அப்படியே வெளியிடுவார்கள். கவர்ச்சியாகவோ... நயமாகவோ பேசத்தெரியாது. தன்னிஷ்டப்படியே எலோரும் நடப்பதை விரும்புவார்கள். மிதமிஞ்சின தன்னம்பிக்கையுடையவர்கள். முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமிருக்கும்.

10ம் தேதி...


நிதானமிருக்கும். சாதுவாக நடந்துகொள்வார்கள். மனதில் உள்ளதை வெளியிடாமல் இருக்க தெரியும். பிரபலம் ஏற்படும். அன்பும் நேசமும் இவர்களது வாழ்க்கையில் அதிகம் காணப்படும். பழகுவதற்கு மனோரம்மியமானவர்கள்.

19ம் தேதி...


மிகுந்த மனோசக்தி உடையவர்கள். பார்த்தால் பசு... பாய்ந்தால் புலி... என்று இவர்களை கூறலாம். இவர்கள் எக்காரியங்களைக்கொண்டும் அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். புலமை உண்டு.

28ம் தேதி...


பார்வைக்கு அழகாக இருப்பார்கள். சிரித்து பேசுவார்கள். ஸ்திரீத்தன்மைகள் காணப்படும் சூரிய ஆதிக்கம் இவர்களுக்கு குறைவாகவே இருப்பதனால் கண்ணாடி தேவையில்லை. யாரையும் சுலபமாக நம்பி விடுவார்கள். ஏமாந்து போவது சகஜமே.

அதிஷ்ட காலம்...


1,10,19 மிக அதிஷ்டமானவை.


28 அவளவு நல்லதல்ல.


கூட்டெண் 1 வரினும் நன்மையானது.


முக்கிய நாட்கள்...


4,13,22,31 அநேகமாக முக்கிய காரியங்கள் நடைபெறும்.


இந்திகதிகளின் சுபாவமே எதிர் பாராததை தருவது தான். நன்மைகள் தாமாகவே வரும். ஆனால், இவர்களாக முயற்சிகளை தொடங்காமல் இருப்பது நன்று.


துரதிஷ்ட காலம்...


8,17,26 துன்புறுத்த வல்லது.


அதிஷ்ட நிறம்...


மஞ்சள், வெளிர் சிவப்பு, வெளிர் நீலம்


துரதிஷ்ட நிறம்...


கறுப்பு, மண்ணிறம்


உலோகம்...


தங்கம்


இரத்தினம்...


மாணிக்கம் மிகச்சிறப்பானது.


டொபாஸ் சிறுவர்களுக்கு நன்மையானது.


கனகபுஸ்பராகமும் நன்மை.
___________________________________

2 ம் நம்பர் காரங்களுக்கு...


2 ம் தேதி... மிதமிஞ்சிய கற்பனை சக்தியுடையவர்கள். உயர்ந்த இலட்சியங்கள் உடையவர்களாக இருப்பார்கள். 11,20,29 திகதிகளில் பிறந்தவர்களை விட பயந்த சுபாவம் உடையவர்களாயும், சாந்தமானவர்களாயும் காணப்படுவார்கள். மனோ சக்திகளே மிகுந்தவர்களாக இருப்பதனால் தீவிர கற்பனை, ஆராச்சிகளில் ஈடுபடுவார்கள். சமூகத்தைதிருத்தி அமைப்பதைப்பற்றி புரட்சிகரமான எண்ணங்களுண்டு. ஆனாலும், இவர்கள் சண்டைகளை விரும்புகிறவர்கள் அல்ல. ஏமாற்றப்பட்டபோதிலும் இவர்களுக்கு கோபம் உண்டாகாது. எழுத்து மூலமும் வாயாலும் சண்டை போடுவதில் வீரர்கள்.

11ம் தேதி...


2,20,29 ஐ விட தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். நம்பிக்கையாலேயே எந்த காரியத்தையும் மிக எளிதாக சாதித்து விடுவார்கள். இந்த திகதியில் பிறப்பவர்களை தெய்வனம்பிக்கை உடையவர்களாக வளர்ப்பது பெற்றோரின் கடமையாகும். படிப்பு, செல்வம் இல்லத போதும்... நம்பிக்கை ஒன்றைக்கொண்டு மிக எளிய நிலையிலிருந்து மிக யுர்ந்த நிலையை அடைவார்கள். சாந்தியை விரும்புவார்கள். மற்றவர்களுக்கு தீங்கு புரிய நினைக்க மாட்டார்கள். சமாதானத்தில் நாட்டமுடையவர்கள். சினேகிதத்துக்கு கட்டு படுவார்கள்.


20ம் தேதி...


மிக மிஞ்சிய கற்பனை சக்தியும்.. தெய்வ அருளும் உடையவர்கள். சுலபமாக உலகம் இவர்களை வழிகாட்டியாக எண்ணி வழிபடும். சுயனலமின்றி வாழ்ந்தாரானால் மனிதருள் தேவராகலாம். சுயனலம் வளரின் தான்னையும், சுற்றத்தாரையும் கஷ்டப்படுத்திவிடுவார்கள். தெய்வ சக்தியை இலாபம் கருதி சிதறடிப்பார்கள். பேராசை நீங்கினால் மிக கண்ணியமான வாழ்க்கை அமையும். அனேகருக்கு சிறந்த வாழ்க்கை வழிகாட்டியாக அமைவார்கள்.


29ம் தேதி...


சாந்தியையும் சமாதானத்தையும் விரும்புகிறவர்களல்ல. இவர்கள் மற்றவர்களை சிரம படுத்த பிறந்த வர்கள் என்று தோன்றுகிறது. சதா வீண் சண்டை போட்டபடியே இருப்பார்கள். ஏன் சண்டை போடுகிறோம் என நினைக்காமலே சண்டை போடுவார்கள். நண்பர்கள் அனைவரும் தன்னை ஏமாற்றுகிறார்கள் என கூறுவார்கள். பிறருக்கு உதவ மனம் வராது. எவரிடமும் சமாதானமாக இருக்கார். மிக நல்லவர் போல நடிப்பார். வீராப்பு அதிகம் பேசுவார்... ஆனால் கோழையுள்ளம் படைத்தவர்கள். பயம் உள்ளூர இருக்கும். எதிரி மிஞ்சினால் பயந்து விடுவார்கள். சிறிய வயதில் பெற்றோர்கள் இவர்களை நல்வழிப்படுத்தாவிடின்... உலகிற்கே தீங்களைக்கத்தக்கவர்களாக வளர்வார்கள். துஷ்ட சினேகிதர்களை அடையாமல் பாதுகாக்க வேண்டும்.
அதிஸ்ட காலம்...


7,16,25 மிக அதிஸ்டமானவை.


கூட்டென் 7 வரினும் நன்று.


25 ம் திகதி மிக்க வலிமையானது.


1,10,19 நன்று.


துரதிஸ்ட காலம்...


2,11,20,29 ல் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்று.


8,9,18,26 நன்மை தராது.


கூட்டெண் 8,9 ம் மிக தீமை.


அதிஸ்ட நிறம்...


இலேசான பச்சை மிக அதிஸ்டமானது.


வெளிர்மஞ்சள், வெள்ளை நன்மை.


துரதிஸ்ட நிறம்...


கறுப்பு, சிவப்பு, ஆழ் நீலம்


இரத்தினம்...


முத்து... பச்சைகல்


வைடூரியம் மிக்க அதிஸ்டம்.


___________________________________


3 ம் நம்பர்காரங்களுக்காக....


3ம் தேதி...நல்ல சிந்தனை சக்தியுடையவர்களாக இருப்பார்கள். தெய்வ பக்தியையும் சரீர பலத்தையும், போற்றி விருத்தி செய்ய வேண்டும். உணர்ச்சிகளை மேன்மையான முறையில் வெளியிட பழகிகொள்ளவேண்டும். கணிதத்தில் இவர்களது மூளையின் பலம் விருத்தியாகும். காவியங்கள், ஓவியங்கள் முதலியவற்றை ரசிக்க பழகிக்கொள்ள வேண்டும். வாழ்க்கைகெளரவமாகவும் உயர்வாகவும் அமையும். நடுவயதுக்கு மேற்பட்டு புகழ் உண்டாகும்.


12ம் தேதி..


இவர்கள் தன்னலங்கருதாத உழைப்பினாலும், தியாகத்தாலும் புகழடைவார்கள். வாழ்க்கையே உலகோருக்காக செய்யும் தவமாக முடியும். தியாகிக்கான குணங்கள் எல்லாம் பிறவியிலேயே அமைந்து இருக்கும். இளவயதிலேயே கவளைகளையும் பொறுப்புகளையும் உணரவேண்டியவர்கள் ஆதலால், இத்திகதியில் பிறப்பவர்களில் பெரும்பாலானோர் சிறு வயதிலேயே தந்தையை இழக்கின்றனர். தாயை மாத்திரம் சிலர் இழப்பதுண்டு. இதன் காரணம் எண்ணின் ஆதிக்கம் குறைந்து இருப்பது தான். பிரமிக்க தக்க பிரசங்கியாவார்கள்.


21ம் தேதி...


தீவிர சுயனலகாரர்களாக இருப்பார்கள். தியாகம் செய்துவிட்டு கூலியை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் பத்திரிகை பார்ப்பது அவசியம். எவளவுக்கு எவளவு உலக அறிவு அதிகரிக்கிறதோ.. அவளவுக்கு வாழ்க்கை உயர்வடையும். காரிய வாதிகள். செய்தி நிருபர்களாயும்... உலக அபிப்பிராயங்களையும் மாற்ற வல்லவர்கள். கடும் போராட்டம் நிறந்ததாக வாழ்க்கை அமையும். திட சித்தத்தால் முன்னேறி வெற்றியை பூரணமாக அனுபவிப்பார்கள்


30ம் தேதி...


தீர்க்க சிந்தனையும் நுட்பமான மூளையுமுடையவர்கள். கம்பீரமாக வாழ்வதையே விரும்புவார்கள். தன்னிஸ்டப்படி நடக்கும் தீவிரவாதியாக இருப்பார்கள். எதையும் கூர்ந்து கவனித்து நுட்பமாக அறியக்கூடிய புத்திசாலிகள். துப்பறியக்கூடிய அளவுக்கு யோசனை கூடியவர்கள். மிகுந்த துணிச்சலும், நெஞ்சழுத்தமும் உடைய இவர்கள் தோல்வியைகண்டு கலங்க மாட்டார்கள். கலைகளில் சுலபமாகத் தேர்ச்சியடையக் கூடிய இவர்கள் தனிமையை ஓரளவு விரும்புவார்கள். இருக்கும் சக்தி எல்லாத்தையும் இப்பிறவியிலேயே உபயோகித்துப் பார்த்து விடுவார்கள்.
அதிர்ஸ்ட தினங்கள்:


3,9,12,18,21,27,30 திகதிகள் மிக்க நன்மையானவை.


விவாகம்,தொழில் என்பவற்றை கூட்டென் 3,9 வரும் தினங்களில் செய்தால் பலன் நீடித்து இருக்கும்.


துரதிஸ்ட தினங்கள்:


6,15,24 திகதிகள் சில சமயங்களில் சாதகமாகத்தோன்றி பின்னர் தீமை விளைவிக்கும்.


கூட்டெண் 6 ஐயும் தவிர்க்கவும்.


அதிர்ஸ்ட நிறங்கள்:


ஒரேஞ், றோஸ், மஞ்சள்,சிகப்பு, நீலம்


தாமரை பூவின் வர்ணம் மிக்க அதிஸ்டமானது.


துரதிர்ஸ்ட நிறங்கள்:


கருனீலம், கறுப்பு, ஆழ்ந்த பச்சை


இரத்தினம்:


செவ்வந்தி (Amethyst)


___________________________________4 ம் நம்பர்காரங்களுக்கு....


4ம் தேதி...மிகுதியான கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள். நல்ல துணிச்சலும் பலமும் இருக்கும். போர் வீரர் போன்று வாழ்வார்கள். உண்விலும், போகங்களிலும் மிதமாக இருக்க பழகிகொள்ள வேண்டும். வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழும். சோர்வடையக்கூடாது. இனிமையாகவும் கவர்ச்சியாகவும் பேச கத்துக்கொள்ளவேண்டும்.


13ம் தேதி..


வாழ்க்கையில் திடுக்கிடும் படியான சம்பவங்கள் எதிர் பாராமல் நிகழும். அபாயங்கள் வந்து நீங்கும். சிறு வயதிலேயே குடும்பத்தில் இவர்களை பாதிக்க கூடிய மாறுதல்கள் ஏற்படும். மிக்க வலிமையுடைய இவர்களை நேர்மையாகவும்; மறைவில்லாமலும் நடத்திகொள்ள வேண்டும். அப்படி வாழ்ந்தால் மிக உன்னத நிலையை அடைவார்கள். பெண்களால் சிரமங்கள் நேரும்.


22ம் தேதி...


நன்மையை விட தீமையே இவர்களை அதிகமாக கவரும். விதி இவர்களின் வாழ்க்கையை தீய வளியில் கொண்டு செல்ல பல சந்தர்ப்பங்களை கொடுக்கும். மித மிஞ்சிய நிர்வாக சக்தியும், சாமர்த்தியமும் உண்டாகும். சூழ்ந்திருப்போர் இவர்களை வஞ்சிக்க சமயம்பார்த்து கொண்டிருப்பர். இவர்களுக்கு பணம் சம்பாதிப்பது எளிது. சுலபமாக பந்தயங்களிலும், சட்டத்துக்கு முரணான வளிகளிலும் சம்பாதிப்பார்கள். இதிலிருந்து விலகியிருப்பது நலம்.

வாகனம், அச்சுக்கூடம், ஹோட்டல் இவையெல்லாம் இவர்கள் இலாபம் சம்பாதிக்க கூடிய துறைகள்.


31 ம் தேதி...


இது முற்று முழுதாக மனோவசியம் சார்ந்த எண்ணாகையால் மிகுந்த தைரியமும், நுட்பமான அறிவும், மன உணர்வுமிருக்கும். புதிதாக பழகிறவர்கள் கூட சில நிமிடங்களில் இவர்கள் சாதாரன மனிதர்கள் இல்லை என்பதை கண்டு பிடித்து விடுவார்கள். இலாப நட்டங்களை பொருட்படுத்தாமல் தன்னிஸ்டப்படியே நடப்பார்கள். எப்படி பட்ட எதிரியையும் பணிய வச்சு விடுவார்கள். ஏகாந்த வாசத்திலும்... வேதாந்த ஆராச்சிகளிலும் ஆர்வம் காட்டுவார்கள். பொகுஜன உபகாரி...
அதிஸ்டகாலம்...


1,10,19 மிகச்சிறப்பு


4,13,22,31 சிறப்பு


துரதிஸ்ட தினம்...


8,17,26 மிக தீமை


7,16 தீமை


அதிஸ்ட நிறம்...


மஞ்சள், வெளிர் நீலமும் பரவாயில்லை.


துரதிஸ்ட நிறம்...


கறுப்பு


இரத்தினம்....


வெளிர் நீல கல் நன்மை, கோமேதகமும் நல்லம்


___________________________________
5 ம் நம் நம்பர் காரங்களுக்கு...5ம் தேதி...இத்திகதியில் பிறப்போர் சிறு வயதிலேயே பெரிய இலட்சியங்களால் கவரப்படுவர். வசீகரமான குணங்களும், பிறரை மதித்தலும் எல்லா மேலான குணங்களும் நிரம்பியவராக இருப்பர். பிறருக்கு போதிப்பவராவர். தெய்வீகமான வாழ்க்கை அமைவதுண்டு.


14 ம் தேதி...


பிரயாணத்தில் சலியாத ஊக்கமும் ஓரளவு பிடிவாதமுமிருக்கும். பொருட்களை சேர்க்கும் அதிஸ்டமிருக்கும், ஆகையால் எல்லாவிதமான பெரும் வியாபாரங்களும் பலிதமாகும். பணப் புழக்கம் அதிகமாகவிருக்கும். எப்போதும் இவர்களை சுற்றி ஜனக்கூட்டம் இருக்கும். பிறரை நம்புவதால் பெருத்த நட்டங்கள் ஏற்பட்டுவிடும். மழை, இடி, நெருப்பு, வெள்ளம் இவைகளைக்கண்டு விலகவேண்டியது அவசியம். உயிருள்ளவரை பிறர் உதவியுண்டு. குன்றாத அதிர்ஷ்டமும் அடிக்கும்.


23ம் தேதி...

இவர்களால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. மிதமிஞ்சிய ராஜவசியமும், ஜனவசியமும் இருக்கும். இவர்களைவிட மேல் நிலையில் இருப்பவர்களும் இவர்களைப் புகழ்வார்கள்.மேலான பண்பாடுகளும் நல்ல நடத்தைகளும் அமையப்பெறின் இவர்கள் சரித்திரம் போற்றும் பெரியாராக ஆகிவிடுவார்கள்.அதிஸ்ட காலம்...


5,9,14,18,23,27


அதிஸ்ட நிறம்...


சாம்பல்


துரதிஸ்ட நிறம்...


பச்சை, கறுப்பு


இரத்தினம்....


வைரம். இயலாதவர்கள் ZIRCON கற்களை தரிக்கலாம்.


___________________________________6 ம் நம்பர்காரங்களுக்கு.6ம் தேதி...மிக்க கண்ணியமும் ஊக்கமும் உடையவர்கள். அடக்கமான சுபாவமும் ஆழ்ந்த கருத்துகளும் இருக்கும்.கலைகளில் சுலபமாக தேர்ச்சி ஏற்படும். பொருள் சேர்ப்பதில் ஆர்வமிருக்கும். பெண்தன்மை ஓரளவு தோன்றும்.


15ம் தேதி...


வசீகரமான தோற்றமுடையவர்கள். எல்லோரையும் வெகு விரைவில் வசப்படுத்தகூடியவர்கள்.ஆதாயம் வந்து கொண்டே இருக்கும். பிரமிக்கத்தக்க பேச்சு வல்லமையும் கலையில் தேர்ச்சியும் இருக்கும்.இயற்கையாகவே வாதிடும் திறனும்ன் நகைச்சுவையானபேச்சுமிருக்கும்.எவரையும்பார்த்தமாத்திரத்திலேயேபுரிந்துகொள்ளத்தக்க கூர்மையான் வ்ழி இருக்கும்.சதா சந்தோசமாக இருப்பர்.


24ம் திகதி...


அடக்கமான தன்மை நிரம்பிய இவர்கள் சாதிப்பதில் சிறந்தவர்கள்.

சமயோசிதமாக பேசுவார்கள். அதிஸ்டகரமான பதவியும், விவாகமும் தேடிவரும்.

இவர்களுக்கு துணிச்சலும் தீவிரமுமுண்டு. சலியாத உழைப்பினால் அதிஸ்டத்தை முழுமையாக பயன்படுத்துவார்கள்.மேலதிகாரிகள் மிகவும் விருப்ப படுவார்கள்.


அதிஸ்டகாலம்...


6,15,24 ம் திகதிகள். கூட்டென் 6 வரினும் நன்மை.


9,18,27 பொதுவானவை.


துரதிஸ்டதினங்கள்...


3,12,21,30 மிகத்தீமையானது.


5,14,23 ம் தீமை.


அதிஸ்ர நிறம்...


ஆழ் பச்சை, ஆழ் நீலம், மற்ற நீலம், பச்சை


துரதிஸ்ட நிறம்...


வெள்ளை, மஞ்சள், றோஸ்


அதிஸ்ட கல்...


மரகதம்


___________________________________

7ம் நம்பர்காரர்களுக்கு...


7ம் தேதிசாந்தமான சுபாவங்களும் அமைதியான மனப்பாங்குமுடையவர்கள். சுலபமாக பிறருக்கு விட்டுக்கொடுத்து அடங்கியிருப்பார்கள். புத்திசாதூரியமும், ரசிகத்தனமுக் விஷேடமாக இருக்கும். தெய்வ வழிபாட்டில் மிக்க நம்பிக்கையுடையவர்கள். குடும்பவாழ்வில் சதா சிக்கலிருக்கும். காதலிலும் கலையார்வத்திலும் பிடிவாதமிருக்கும்.
16ம் தேதி


7,25 ஐ விட விஷேடமான மனோசக்தியுடையவர்கள். இத்திகதியில் சிறுவயதிலேயே பிரசித்தமான பலர் பிறந்திருக்குறார்கள். அநேகர் சமூகம் திடுக்கிடும் காரியங்களை செய்வார்கள். சமூகம் தண்டிக்க கூடிய காரியங்களில் சகயமாக ஈடுபடுகின்றனர். முறைதவறிய காதல் விவகாரங்களில் ஈடுபடாவிடின் வாழ்க்கை மேன்மையுறும்.
25ம் தேதி


தீவிர மதப்பிடிவாதமுடையவர்கள். தான் அனுசரிப்பது தான் சரி என பகிரங்கமாக கூறுவார்கள். இவர்களை அனேகர் பின்பற்றுவர். அதிகாரம், வணங்கப்படுதல் இவர்களுடன் கூடப்பிறந்தவை. குடும்ப வாழ்வில் சுகமிராது.


அதிஸ்ட காலம்...


2,11,20,29 திகதிகளும் கூட்டெண் 2 வரினும் நல்லம்.


சாதகமான நாட்கள்...


1,10,19 மிக நல்லம், 25 நல்லம்.


பாதகமான நாட்கள்...


8,17,26 கூட்டெண் 7,8 எனினும் தீமை.


நிறம்...


மஞ்சள், வெளிர் பச்சை, வெளிர் நீலம் சிவப்பு, கறுப்பு துரதிஷ்டம்.


இரத்தினம்...


வைடூரியம்


___________________________________
8 ம் நம்பர்காரங்களுக்கு....
8ம் தேதிஅமைதியான வாழ்க்கையை விரும்புபவர்கள். பல காரியங்களை சமாளிக்க முயற்சி செய்வார்கள்.மதம், பரசாதனங்கள், தெய்வ வழிபாடு, வேதாந்தம் இவர்கள் மனதைப் பிடித்திழுக்கும். உடலோ சுகத்தை விரும்பும். மனதோ தியாகத்தையும், துறவையும் நினைவுறுத்தும். ஏதாவது பரோபகாரமான காரியத்திலோ, தன் சுகத்தை தியாகம் புரிவதிலோ ஈடுபடாவிடில் மன அமைதி ஏற்படாது. மனச்சாட்சி அதிகம் வளர்ந்திருப்பதால் நேர்மையான வாழ்க்கையுண்டு. இவர்கள் பலத்த உழைப்பாளிகள். பல அரிய காரியங்களை சாதிக்க வல்லவர்கள். சமூக நன்மைக்காக போராடுவார்கள்.


17 ம் தேதி

சீமானாக இராவிடினும் அதற்காக முயற்சிப்பார்கள். சரீர சுகங்களை மனம் இடைவிடாது நாடும். சதா பெருந்தொகை பணம் சேர்த்துக்கொள்ள திட்டம் போடுவார்கள். சுகம் முக்கியமானதாக நினைப்பதால் நியாயமான முறைகளை விட்டு மோசடியான முறையில் பணம் சேர்ப்பார்கள். பொதுப்பணத்தை தன்னுடையதாக்குவார்கள். பகட்டுக்காக செலவுசெய்தாளும், மனம் விரும்பி செய்யமாட்டார்கள். கஞ்சத்தனம் உடலிலே ஊறிவிடும். கூட்டு எண் 5,9 ஆயின் மனம் போனபடி செலவு செய்வார்கள். ஆத்மீக வாழ்விலோ அல்லது மங்காத புகழுக்காகவோ உழைப்பார்கள்.


26 ம் தேதி


8,17 ஐ விட துரதிஸ்டவாதிகள். பெருப்பாலானோர் இளவயதிலேயே பெற்றோரில் ஒருவரையேனும் இழக்கின்றனர்.சிறுவயதிலேயே கஷ்டங்களும்,முன்னேற்றத்தடைகளும் ஏற்பட்டு விடுகின்றன. முன்னேற்றத்தில் விருப்புடையவர்களாதலால் கஷ்டங்களை சகித்துக்கொண்டு வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள்.

பிறரால் வீண் பழிகள் சுமத்தப்படுவது சகஜமே. எதிரிகள் பலர் இருப்பார்கள். கற்பனா சக்தியும், நகைச்சுவையுனர்வும், கூர்மையான அறிவும் காணப்படும்.அதிஸ்டகாலம்:


1,10,19 திகதிகள். கூட்டெண் 1 என்றாலும் அதிஸ்டம்.


4,13,22,31 சாதகமானவை.


துரதிஸ்டகாலம்:


8,17,26 வீண் விவகாரங்கள், நோய்கள் ஏற்படும். பயணங்களை தவிர்ப்பது நல்லது.


நிறம்:


மஞ்சள் முதல்மையானது.


பச்சை நீலம் நன்மையானது.


கறுப்பு, மண்ணிறம் மற்றும் மங்கலான நிறங்கள் பொருந்தாது.


இரத்தினம்:


நீலக்கல்


___________________________________
 
 


9 ம் நம்பர்காரங்களுக்கு....


9ம் தேதி...பிறந்தவர்கள் செயற்கரிய செயல்களை செய்ய வல்லவர்கள். நுட்பமான மூலையறிவு உடையவர்கள். மேன்மையான இலட்சியங்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்புறும். எல்லா எதிர்ப்புக்களையும் சாமர்த்தியத்துடன் வெற்றிகொள்வார்கள்.
18ம் தேதி..

சுயனலத்தை விட்டால்தான் இவர்களுக்கு நன்மையுண்டாகும். அவசரப்பட்டு ஒரு விவகாரத்திலும் சிக்கி கொள்ளக்கூடாது. எல்லோரிடமும் மனக்கசப்பை உண்டாக்க கூடிய தினமாகையால், இவர்கள் கோபத்தையும் பிடிவாதத்தையும் குறைக்க வேண்டியது அவசியம். காதலில் அவசரப்படும் போக்கு தோல்வியைத்தரும். உணர்ச்சிகள் மனதை தூண்டிக்கொண்டே இருக்கும்.
27ம் தேதி...


நற்காரியங்களில் ஈடு பட்டு நற்பலன்களையே அடைவர். ஜோசனைகள் எல்லாம் வெற்றி பெறும். சாந்தமானவர்கள். ஆழ்ந்த ஜோசனையும் தளராத மனமுமுடைய இவர்கள் தீவிரமாக சிந்திப்பார்கள்.9,18,27 இக்கு அதிஷ்ட தினங்கள்...


5,14,23,9,18,6,15,21,24,30 திகதிகள் அதிஸ்டமானவை... 1,10 ம் சாதகமானவை. 27ல் நல்ல பலன்கள் நடைபெறும்.


துரதிஸ்ட தினங்கள்...


2,11,19,29 நற்காரியங்கள் செய்வது நன்மையல்ல.


நன்மை தரும் நிறம்...


கரும் சிவப்பு, நீலம்


தீமை தரும் நிறம்...


வெளிர் பச்சை, வெண்மை


இரத்தினம் : பவளம்நன்றி - வி..சிவராசா BA

No comments:

Post a Comment