சர்க்கரை நோய் - வெண்டைக்காய்



வெண்டைக்காய்

தமிழ் நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழக ஒன்பதாவது மாநில மாநாட்டு மலரில் வெண்டைக்காய் பற்றி Dr. N.செல்லையா அவர்கள் எழுதி இதைப் படித்தவர்கள் நகல் எடுத்துப் பலருக்கும் கொடுத்தால் பெரும் தொண்டு. அதை நான் இங்கு தருகிறேன். நீங்களும் இதைப் படித்து மற்றவர்களுக்கு சொல்லலாம்.

ஒரு வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தலையையும், நுனியையும் வெட்டி எறிந்துவிடுங்கள். மீதியுள்ள காயை இரண்டு அல்லது மூன்று துண்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். இரவு படுக்கப் போகும் முன் அரை டம்ளர் தண்ணீரில் அதை ஊறப்போடுங்கள் .காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக வெண்டைக்காய் துண்டங்களை வெளியே எடுத்துப் போட்டுவிட்டு அந்த தண்ணீரைக் குடியுங்கள். (குறைந்தது ஒரு மணி நேரம் காபி, டீ வேறு எதுவும் அருந்த வேண்டாம்.) இப்படிக் குடித்து வந்தால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரை இரண்டே வாரங்களில் மளமள என்று இறங்கிவிடும் பலன் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். செலவே இல்லாத வைத்தியம்.ஆனால் ஒன்று, வெண்டைக்காய்த் தண்ணீர் ஆகையால் வாயில் அரை நிமிடம் கொளகொள என்றிருக்கும். கூடவே ஒரு மடங்கு தண்ணீர் குடித்தால் அந்த உணர்வும் அகன்றுவிடும்.

இந்த வெண்டைக்காய்த் தண்ணீரை எவ்வளவு நாள் அருந்தி வரவேண்டும்? எப்போது நிறுத்துவது? தற்சமயம் சாப்பிட்டு வரும் மாத்திரைகளை நிறுத்தலாமா? ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து விட்டால் அபாயம் ஆயிற்றே? இப்படி எல்லாம் சந்தேகம் வரும்.

வாரத்திற்கொருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுவது அவசியம். அந்த ரிபோர்ட்டைத் தகுந்த டாக்டரிடம் காட்டுங்கள். வெண்டைக்கை வைத்தியத்தைத் தொடரலாமா? அல்லது தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளலாமா? என அவரிடம் கேளுங்கள். அவர் சொல்கிறபடி செய்யுங்கள்

நம் வீட்டுத் தோட்டங்களில் இயற்கை உரமிட்ட வெண்டைக்காய் கிடைத்தால் இன்னமும் நல்லது.

சர்க்கரை நோயாளிகளின் மாத்திரை அளவு குறைய வேண்டுமென்றால் தினமும் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி,செய்யவேண்டும். இப்படி செய்தால் உடலில் உள்ள இன்சுசிலின் நன்றாக வேலை செய்யும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் எடை இயல்பான அளவுக்குக் குறையும், இதயத்துக்குத் தீமை செய்யும் கெட்ட கொலஸ்டரால் (எல்டிஎல்) குறைக்கும், நல்லகொலஸ்டரால் (எச்டிஎல்) அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறையும், நன்றாக தூக்கம் வரும்.உணவு எளிதில் ஜீரணமாகும். மொத்தத்தில் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.

உடற்பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு 5 முதல் 10 நிமிஷங்கள் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். இதேபோன்று உடற்பயிற்சியை முடித்தவுடன் 5 முதல் 10 நிமிஷங்கள் இளைப்பாறுங்கள். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள். முடிந்தவரை வேகமாக நடக்க முயற்சி செய்யுங்கள். நடந்து செல்லும்போது நீண்ட வழியையே தேர்வு செய்யுங்கள். லிஃப்ட்டில் செல்லாமல் மாடிக்குப்படி ஏறிச்செல்லுங்கள். கடைக்குச் செல்லும் போது வாகனங்களைச் சிறிது தொலைவிலே நிறுத்திவிட்டு மீதித் தொலைவை நடந்து செல்லுங்கள்.

தாழ் சர்க்கரை நிலை காரணமாகத் தலை சுற்றல், மயக்கம் ஏற்படலாம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் கடைப் பிடிக்கவேண்டியவை:

கையில் எப்போதும் சாக்லேட்,மிட்டாய் வைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருங்கள். உடற்பயிற்சியின்போது நெஞ்சில் வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக உடற்பயிற்சியை நிறுத்திவிடுங்கள்.




                                           

No comments:

Post a Comment