புகைப்பட தேடியந்திரம்




புகைப்படங்கள் தேவைக்கு கூகுலில்-Images தேடிப்பார்க்கலாம். புகைப்படங்களுக்காக என்று உள்ள பிரத்யேக தேடியந்திரங்களில் போட்டோ லைப்ரரியையும் சேர்த்து கொள்ளலாம். புகைப்பட நூலகம் என்னும் பொருள்பட உள்ளது.

கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேடுவது போல தான் இதிலும் சொல்லை டைப் செய்து தேட வேண்டும், தேடுபவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பல விதங்களில் தேடலை சுருக்கி, விரிவு படுத்திக்கொள்ளலாம்.

உலக புகழ்பெற்ற புகைப்பட கலைஞரின் படைப்பாற்றலை உணர்த்தக்கூடிய படங்கள், செய்தி மற்றும் பொழுதுபோக்கு வகை படங்கள் என குறிப்பிட்டு தேடிக்கொள்ளலாம். காப்புரிமை பெற்ற புகைப்படத்திற்கு கட்டணத்தையும் - கட்டணம் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய இலவச படங்களையே பயன்படுத்திக்கொள்ளலாம். ஜேபெக் அல்லது பிட்மேப் வடிவில் தேர்வு செய்து கொள்ள முடியும்.

புகைப்படங்களை முன்னோட்டம் பார்க்கும் வசதியும், டவுண்லோடு செய்து கொள்ளும் வசதிகளுக்கு உறுப்பினராக சேர வேண்டும் கட்டணம் இல்லை புகைப்பட‌ பிரியர்கள் இதன் அபிமானியாகி விடுவார்கள்.

 
 

No comments:

Post a Comment