பைல் ரிப்பேர் - மென்பொருள் - File - Repair Software



கணினியில் சில நேரங்களில் எதிர்பாராத வைரஸ் புகுந்து நம்முடைய பைல்கள் பழுதாகிவிடும், மற்றும் எதிர்பாராத மின் வெட்டு பிரச்சினை, தொழில் நுட்ப கோளாறுகள், போன்ற காரணங்களால் அனைத்து தகவல்களையும் பைல்களை இழக்க நேரிடும். இந்த பிரச்சினைக்கு பைல் ரிப்பேர் செய்ய இலவச மென்பொருள்  உதவுகிறது.


மென்பொருளால் ரிப்பேர் செய்யப்படும் பைல் பார்மட்கள்:

corrupted Word documents (.doc, .docx, .docm, .rtf)
corrupted Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
corrupted Zip or RAR archives (.zip, .rar)
corrupted videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
corrupted JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
corrupted PDF documents (.pdf)
corrupted Access databases (.mdb, .mde, .accdb, .accde)
corrupted PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
corrupted music (.mp3, .wav) - போன்ற பைல்களை ரிப்பேர் செய்து மீண்டும் உபயோகிக்க இந்த மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளால் பைல் ரிப்பேர் செய்ய முடியாவிட்டால் இந்த முகவரிக்கு repair@filerepair1.com பழுதான பைலை அனுப்பி பைலை திருத்தி மீண்டும் செயல்படுத்தி தருவார்கள்.






நீர் குமிழி மேஜிக் - வீடியோ




எனக்கு இந்த வீடியோ மிகப்பிடித்து இருந்தது அதை உங்கள் உடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் நீர் குமிழி மேஜிக் - வீடியோ

புகைப்பட தேடியந்திரம்




புகைப்படங்கள் தேவைக்கு கூகுலில்-Images தேடிப்பார்க்கலாம். புகைப்படங்களுக்காக என்று உள்ள பிரத்யேக தேடியந்திரங்களில் போட்டோ லைப்ரரியையும் சேர்த்து கொள்ளலாம். புகைப்பட நூலகம் என்னும் பொருள்பட உள்ளது.

கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேடுவது போல தான் இதிலும் சொல்லை டைப் செய்து தேட வேண்டும், தேடுபவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பல விதங்களில் தேடலை சுருக்கி, விரிவு படுத்திக்கொள்ளலாம்.

உலக புகழ்பெற்ற புகைப்பட கலைஞரின் படைப்பாற்றலை உணர்த்தக்கூடிய படங்கள், செய்தி மற்றும் பொழுதுபோக்கு வகை படங்கள் என குறிப்பிட்டு தேடிக்கொள்ளலாம். காப்புரிமை பெற்ற புகைப்படத்திற்கு கட்டணத்தையும் - கட்டணம் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய இலவச படங்களையே பயன்படுத்திக்கொள்ளலாம். ஜேபெக் அல்லது பிட்மேப் வடிவில் தேர்வு செய்து கொள்ள முடியும்.

புகைப்படங்களை முன்னோட்டம் பார்க்கும் வசதியும், டவுண்லோடு செய்து கொள்ளும் வசதிகளுக்கு உறுப்பினராக சேர வேண்டும் கட்டணம் இல்லை புகைப்பட‌ பிரியர்கள் இதன் அபிமானியாகி விடுவார்கள்.

 
 

புகைப்படத்தை எடிட் செய்ய இணைய தளம்



புகைப்படத்தை ஆன்லைனில் எடிட் செய்ய அருமையான இணைய தளம் கான்ட்ராஸ்ட், பிரைட்னஸ், ஷார்ப்னெஸ்,  குறைக்க ஏற்ற முடியும். படத்தை எந்த கோணத்திலும் திருப்பவும், 3டி முறையில் சுழற்றவும் முடியும் JPG, PNG, BMP, மற்றும் ஐகான் கோப்புகளாக மாற்ற முடியும். 100 மேற்பட்ட டூல்கள் உள்ளது இந்த இணைய தளத்தில் இல்லாத வசதிகளே இல்லை என்று கூறலாம்.




செல்போனில் வரும் CALL, SMS களையும் தடுக்க ஒரு வசதி




நமக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுத்து விடமுடியும், " Block list Calls " மற்றும் " Block list SMS" என்ற வசதியாகும் இந்த 2 வசதிகளையும் நமது செல்போனில் பயன்படுத்தி கொள்ளலாம்.

நமக்கு வரும் தேவையில்லாத ஒரு நம்பர் or குருப் கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம், ஸ்பாம் நம்பர்ஸ் அப்டேட்ஸ் செய்து கொள்ளலாம். பாஸ் வோர்ட் வசதி செய்து கொள்ளலாம். " Lite version " மற்றும் " Paid version " என்ற இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது

Nokia, Windows Mobile , Android & Blackberry,

Nokia 3250, 5230, 5230 T-Mobile Nuron, 5228, 5235, 5320 XM, 5320 XM, 5500, 5530 xpress, 5700, 5730 Xpress, 5800 Xpress, 6110,6120, 6121, 6210, 6220, 6290, 6710 Navigator, 6700 Slide, 6710 Navigator, 6720 Classic, 6730 Classic, 6760 Slide, 6788, 6788i,6790 Surge, 6790 Slide, C5-00, C6-00, C7, E5-00, E50, E51, E52, E55, E60, E61, E61i, E62, E63, E65, E66, E70, E71, E71x, E72,E75, E75, E90, N69, N71, N73, N75, N76, N77, N78, N79, N80, N81, N81 8GB, N82, N85, N86, N91, N92, N93, N95, N95 8GB, N96,N97, N97 Mini, X5, X6, N8, Sony Ericson Satio, LG KS10, Samsung SGH-G810, Samsung INNOV8, Samsung SGH-L870

அணைத்து வகை மொபைல்களுக்கும் பயன்படக் கூடியது.

 

Download Manager - Microsoft Download Manager-தரவிறக்கி



Microsoft Download Manager-மென்பொருள் இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்க உதவுகிறது, எளிமையாகவும் விரைவாகவும் தரவிறக்கலாம், தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும் (Pause download)  மறு தொடக்கம் (Resume) செய்கிற வசதியுள்ளது, தரவிறக்கத்தை மேற்கொள்ள New Download  கொடுத்து கோப்புகளின் இணைய முகவரியை காப்பி செய்து விட்டால் போதும், பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யும் Batch Downloading வசதியுள்ளது. எங்கே சேமிக்கப்பட வேண்டும் என்பதை Settings-ல் ஒரு தடவை அமைத்துவிட்டால் போதும். விண்டோஸ் அனைத்து பதிப்புகளிலும் செயல்படும்.







இணைய உலவி - சிறுவர்


Tweens Browser

சிறுவர்களுக்கு படிப்பு சம்பந்தமான தேவையான அனைத்து உதவிகளையும் Tweens Browser தருகிறது Google சென்று ஒவ்வொரு தலைப்புகளுக்கும் சென்று தேடுவதை இது தவிர்க்கிறது


News

Discoveries

Animals

Games

Music

School Tools

References & Stories

Sports & Activties

Television & Movies

Varius Sites

என பல தரப்பட்ட web site - களை ஒருங்கிணைத்து உள்ளது இது ஒரு portable மென்பொருள் - 5 MP அளவுள்ளது பார்க்க அழகாகவும் ஒரு வித குதுகலத்தை தருகிறது வண்ணமயமானது சிறுவர்களுக்கு மிக பாதுகாப்பான browser .



வீடியோ எடிட் செய்ய இணையதளம்




வீடியோ எடிட் செய்வதற்கான இணையதளம் வீடியோ எடிட் பணிகளை செய்ய மிகவும் பயனுள்ள அனைத்து வசதிகளும் உள்ளது.


இந்த தளத்தில் CUT, EDIT, CROP, WATER MARK, MERGE, வசதிகளும்

கணினியின் கேமரா மூலம் வீடியோக்களை பதிவு செய்யும் வசதி உள்ளன

வீடியோ கன்வெர்ட் செய்யும் வசதி

வீடியோ,ஆடியோ செட்டிங் வசதி உண்டு

20 க்கு மேற்பட்ட வீடியோ தளங்களில் தரவிறக்கம் செய்யலாம்.

வீடியோக்களுக்கு SUB-TITLES இடலாம் .

இந்த தளத்தில் 300MB அளவு FILE களை பயன்படுத்தலாம்.

பல வசதி உள்ள இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்



 

சர்வதேச தொலைபேசி இலவசம்



எந்த எண்ணுக்கும் தினமும் இணையம் மூலமாக கணிப்பொறி அல்லது 3G கைபேசியின் உதவியுடன் ஆறு அழைப்புக்கள் இலவசமாக வழங்கும்.

ஒரு கணக்கு தொடங்கவும், இதற்க்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியே பயனர் கணக்காக இருக்கும். மென்பொருளை இலவசமாக தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், கைப்பேசி என்றால் அதற்கான மென்பொருளை தரவிறக்கி உங்கள் 3G கைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

உங்கள் கணக்கை இயக்கவும், கடவுச்சொல் நிறுவவும், ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும், அழைக்கும் நாட்டைத்தேர்வு செய்து அழைக்கப்போகும் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணைக்கொடுத்து call என்கிற பொத்தானை அழுத்த . . . . இணைப்பு பெறலாம்