ஸ்கிரீன்ஷாட்



எந்த ஒரு மென் பொருள் இல்லாமல் எளிதாக நம் கீபோர்டு பயன்படுத்தி ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம். நம் மானிட்டரில் தெரியும் இணையதளத்தை காட்டவோ அல்லது செயல்முறை விளக்கத்தைச் சொல்லவோ சின்னச் சின்ன ஸ்கிரீன்ஷாட்டுகளைப்பயன்படுத்துவோம். இதற்கு சிறிய அளவிலான நிறைய மென்பொருட்கள் இணையத்தில் உள்ளன.அவற்றைத் தரவிறக்கம் செய்து நம் கணிணியில் நிறுவி பயன்படுத்துவோம்.

ஒரு எளிய முறையில் நம் கீபோர்டு  கீ பயன்படுத்தியே ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும். நம் கீ போர்டில் முதல் வரிசையில் F12 கீ க்கு கீழாக ஒரு கீ Printscrc/sysRq  இருக்கும் பாருங்கள். அதுதான் கணிணித் திரையில் தெரியும் பக்கத்தை ஸ்கிரீன்ஷாட் எடுக்கப் பயன்படுகிறது.

நாம் விரும்பும் மானிட்டர் திரைப் பக்கத்தை  திறந்து வைத்து விட்டு Printscrc/sysRq கீ யை ஒருமுறை அழுத்துங்கள்.
  

Start -->
all Programs -->
Accessories -->
Paint. புரோக்ராம் ஓபன் செய்து கொள்ளவும்.

பெயிண்ட்டில்  Edit பட்டனைக் கிளிக் செய்து paste option கிளிக் செய்ய ஸ்கிரீன் ஷாட் படம்  திரையில் தோன்றும்.




அதன் அளவை மாற்ற விரும்பினால்   Images கிளிக் செய்து attributes ஓபன் செய்தால் கிடைக்கும் பகுதியில் மாற்றம் (Crop) செய்து கொள்ளலாம்.

பின்னர் அதை சேவ் செய்யும் போது file வகையில் .jpeg  பார்மட்டில் சேமித்துக் கொள்ளலாம்.
பெயிண்ட்டில் உள்ள file option ஓப்பன் செய்து கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தி இந்த ஸ்கிரீன்ஷாட்டை பிரிண்ட் எடுக்கவோ அல்லது நேரிடையாக மின்னஞ்சல் இணைப்பாக  அனுப்பவோ செய்யலாம்.


1 comment: